Youtuber, சினிமா விமர்சகர், பிக் பாஸ் போட்டியாளர், சினிமா இயக்குனர் என பன்முகத் திறமையாளராக வலம் வந்து கொண்டிருக்கும் அபிஷேக் ராஜா இன்று தனது இரண்டாவது திருமணத்தை நடத்தி முடித்துள்ளார். அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

தனியார் youtube சேனலில் சினிமா விமர்சகராக தனது வாழ்க்கையை தொடங்கிய அபிஷேக் ராஜா பின்னர் ‘ஓபன் பண்ணா’ என்கிற youtube சேனலை தொடங்கி விமர்சனங்களை வெளியிட்டு வந்தார். ‘
சினிமா பையன்’ என்கிற அடைமொழியுடன் வலம் வந்த இவருக்கு படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை.

இதனால் பிக் பாஸில் கலந்து கொண்டார். பிக் பாஸ் சீசன் 5 வில் ஒரு போட்டியாளராக வலம் வந்த அவருக்கு பல எதிர்ப்புகள் கிளம்பின.

அதீத பேச்சாலும் துடிப்பான செயல்களாலும் ரசிகர்களின் வெறுப்பை மட்டுமே அவர் சம்பாதித்து இருந்தார். அபிஷேக் ராஜாவின் முதல் திருமணம் பல பிரச்சினைகளில் முடிந்திருந்தது.

2017ம் ஆண்டு தீபா நடராஜன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

பின்னர் திருமண வாழ்க்கை கசந்ததால் அவர்கள் இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர்.


இந்த நிலையில் தற்போது அவர் சுவாதி நாகராஜனை கரம் பிடித்துள்ளார். பலரும் அபிஷேக் ராஜாவுக்கு தங்களது திருமண வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.