சந்தானம் நடிக்கும் டிக்கிலோனா திரைப்படம் எப்போது வெளியாகிறது தெரியுமா?

வெளியிட்டது

விஜய் டிவியின் லொள்ளு சபா என்ற காமெடி நிகழ்ச்சியின் மூலம் , தமிழ் சினிமாவிற்கு சிறந்த காமெடியனாக அறிமுகமாகி தற்போது ஹீரோவாக கலக்கி வருபவர் சந்தானம். தமிழ் படங்களை spoof செய்து காமெடி நிகழ்ச்சியாக மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெட்ரா நிகழ்ச்சி லொள்ளு சபா. இந்த நிகழ்ச்சியின் மூலம் தமிழ் சினிமாவிற்கு சிறந்த காமெடியனாக கிடைத்தவர் சந்தானம். வடிவேலு , விவேக்

சந்தானம் நடிக்கும் டிக்கிலோனா திரைப்படம் எப்போது வெளியாகிறது தெரியுமா? 1

என்ற ஜாம்பவான்களுக்கு பிறகு காமெடியில் கலக்கியவர் சந்தானம் தான். பேசாத கண்ணும் பேசும் என்ற படத்தில் முதல் முதலாக நடித்த சந்தானம் மன்மதன் படத்திற்க்கு பிறகு அனைவருக்கும் பிடித்த காமெடியனாக உருமாறினார். காமெடியனாக நடித்து இன்று முன்னணி ஹீரோவாக வளம் வருபவர் சந்தானம்.வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்ற படத்திலிருந்து தற்போது வெளியான

பாரிஸ் ஜெயராஜ் படம் வரை ஹீரோவாக கலக்கிவருகிறார் சந்தானம். தற்போது இவர் நடிப்பில் வெளிவர இருக்கும் திரைப்படம் டிக்கிலோனா. இந்த படத்தின் ட்ரைலர் வெளியான பொதே ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியது. இந்நிலையில் தற்போது இந்த படத்தின் வெளியீட்டு தேதி வெளியாகியுள்ளது. இந்த படம் செப்டம்பர் 10 ஆம் தேதி ஓ.டி.டி யில் வெளியாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Kiruthika

அகந்தை முன்னே செல்லும், அவமானம் பின் தொடரும். I've danced to AR Rahman's tunes and cheered for Rajinikanth, and now, I'm your go-to journalist for all things Tamil entertainment, offering an insider's perspective that's second to none.

வெளியிட்டது

புதிய செய்திகள்