அது கல்யாணமா இல்லை வியாபாரமா?”இதெல்லாம் நம்ப இனத்தோட சாபம்”!! நயன்தாரா திருமணம் குறித்து பேசிய சீமான்!!

அது கல்யாணமா இல்லை வியாபாரமா?"இதெல்லாம் நம்ப இனத்தோட சாபம்"!! நயன்தாரா திருமணம் குறித்து பேசிய சீமான்!! 1

சோசியல் மீடியா அனைத்திலும் ட்ரெண்டிங்கில் இருப்பது நயன்தாரா விக்னேஷ் சிவன் திருமண செய்திகளே. கடந்த ஒரு வாரமாக இவர்களுடைய திருமண செய்த்தையை மட்டுமே அனைவராலும் பேசப்பட்டு வருகிறது. 2015ஆம் ஆண்டு துவங்கிய இவர்களது காதல் இப்பொது திருமணத்தில் முடிந்துள்ளது.

விளம்பரம்

அது கல்யாணமா இல்லை வியாபாரமா?"இதெல்லாம் நம்ப இனத்தோட சாபம்"!! நயன்தாரா திருமணம் குறித்து பேசிய சீமான்!! 3

சென்னையை அடுத்த மகாபலிபுரத்திலுள்ள தனியார் ரெசார்ட்டில் நடந்த இவர்களது திருமண விழாவில் அவர்களுக்கு நெருக்கமான நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் சுமார் 100 பேருக்கும் அதிகமானோர் கலந்து கொண்டிருந்தனர். இந்த திருமணத்தில் இரு வீட்டாரும், அவருடைய நெருங்கிய நண்பர்களும், சில முக்கிய பிரபலங்கள் மட்டுமே பங்கேற்றிருந்தனர். திருமணத்தில் வெளியாட்கள் யாரும் பங்கேற்க அழைப்பில்லை. திருமணத்திற்கு வருபவர்கள் அழைப்பேசி, கேமரா உள்ளிட்டவைகளை கொண்டு செல்ல அனுமதி இல்லை. முறைப்படி அழைப்பு விடுக்கப்பட்ட நபர்கள் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்பட்டு இருந்தார்கள்.

விளம்பரம்

அது கல்யாணமா இல்லை வியாபாரமா?"இதெல்லாம் நம்ப இனத்தோட சாபம்"!! நயன்தாரா திருமணம் குறித்து பேசிய சீமான்!! 5

தனியார் OTT தளத்திற்கு ஒளிபரப்பிற்காக விற்கப்பட்ட இவர்களது திருமணநிகழ்வால் பெரிதும் இது குறித்த செய்திகள் அடுத்தடுத்து வெளிவந்து கொண்டே இருந்தன. திருமண முடிந்து திருப்பதி சென்ற தம்பதிகள் அங்குள்ள காலணிகளுக்கு தடை செய்யப்பட்ட இடத்தில் செருப்பு அணிந்து சென்று பெரும் விமர்சனத்தை ஏற்படுத்தியது. இதற்கு மன்னிப்பு கடிதம் எழுத்தியும், இருவரது மேலும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தேவஸ்தான போர்டு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

விளம்பரம்
தொடர்புடையவை  தல அஜித்தை வைத்து இரண்டு வெற்றிப்படங்களை இயக்கியுள்ள பிரபல நடிகர்! எந்தெந்த படங்கள் தெரியுமா?

அது கல்யாணமா இல்லை வியாபாரமா?"இதெல்லாம் நம்ப இனத்தோட சாபம்"!! நயன்தாரா திருமணம் குறித்து பேசிய சீமான்!! 7

இந்த பிரச்சனைகளை தாண்டி நடிப்பதற்கு இனிமேல் கண்டிஷன் போட்டுள்ள நடிகை நயன்தாராவை குறித்தே நேற்று முதல் அனைவரும் பேசி வருகிறார்கள். தொடர்ந்து படப்பிடிப்பில் நடிக்க மாட்டேன், நடிகர்களுடன் நெருக்கமாக நடிக்க போவதில்லை என இரண்டு புதிய கட்டுப்பாடுகள் சொல்லியுள்ளதாக கூறப்பட்டுவருகிறது.

விளம்பரம்

அது கல்யாணமா இல்லை வியாபாரமா?"இதெல்லாம் நம்ப இனத்தோட சாபம்"!! நயன்தாரா திருமணம் குறித்து பேசிய சீமான்!! 9

இப்பொது அடுத்தக்கட்ட செய்தி இவர்களிடம் இருந்து வெளியாகியுள்ளது. நாம் தமிழர் கட்சி சீமான் இது குறித்து காரமாக பேசியுள்ளார். தமிழ்நாட்டு மக்களுக்கும், தமிழ் இனத்திற்கும் தொடர்ந்து நடக்கும் கேடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து அடுத்தடுத்து தன்னுடைய கருத்துக்களையும், எதிர்ப்புகளையும் எப்போதும் வெளிப்படுத்திக்கொண்டே இருக்கிறார்.

விளம்பரம்

அது கல்யாணமா இல்லை வியாபாரமா?"இதெல்லாம் நம்ப இனத்தோட சாபம்"!! நயன்தாரா திருமணம் குறித்து பேசிய சீமான்!! 11

இவர் இப்பொது ஒரு போட்டியாளர் சந்திப்பில்,கொஞ்சம் கோவமாகவே நயன்தாரா விக்னேஷ் சிவன் திருமணம் குறித்து தன்னுடைய கருத்தை பதிவு செய்துள்ளார். அவர் பேசும் போது, “தொலைக்காட்சி விவாதங்களில் என்ன நடக்கிறது? நயன்தாரா திருமணம் வியாபாரமா அல்லது திருமணமா என்பது போன்ற விவாதம் நடக்கிறது, இதெல்லாம் நமக்கு இப்போது தேவை தானா?”.

விளம்பரம்

அது கல்யாணமா இல்லை வியாபாரமா?"இதெல்லாம் நம்ப இனத்தோட சாபம்"!! நயன்தாரா திருமணம் குறித்து பேசிய சீமான்!! 13

மேலும் அவர், “என்னிடமே ஒருவர், அந்த திருமணம் பற்றி என்ன நினைக்கிறீர்கள் என கேட்டார், அதற்கு வேறு எதாவது கேளப்பா என சொன்னேன். அவனுக்கு பேசுறதுக்கு செய்தி கிடையாது.” இவர்களுக்கு யார் புத்தி சொல்வது என்று எனக்கு தெரியவில்லை. இங்கு எழுத்தாளர்கள், படைப்பாளர்கள் போற்றப்படுவதும் இல்லை, மதிக்கப்படுவதும் இல்லை. உங்களுக்கு நினைவியப்படுத்துவதற்காக கூறுகிறேன் தேவநேயப் பாவாணர் எம் ஜி ஆர் நடத்திய உலக தமிழர் மாநாட்டில் பேசிய போது அவர் பேச்சை கவனிக்காமல் கூட்டம் கலைந்து போன மன வலியில் தான் அவர் இறந்து போனார், இதெல்லாம் உண்மை தானே, நம்முடைய சமூகத்தை நீண்ட காலமாக யோசிக்க விடமால் செய்து வருகிறார்கள்.

விளம்பரம்
தொடர்புடையவை  போனை தொலைத்த மன கஷ்டத்தில் விராட் கோலி போட்ட பதிவு.! கிண்டல் செய்த டெலிவரி நிறுவனம்.!

அது கல்யாணமா இல்லை வியாபாரமா?"இதெல்லாம் நம்ப இனத்தோட சாபம்"!! நயன்தாரா திருமணம் குறித்து பேசிய சீமான்!! 15

இந்த தலைமுறை தமிழ் பிள்ளைகள் போற்றிக் கொண்ட வேண்டியவர்கள் பலர் இருக்கின்றனர். ஆனால் நமக்கு அதை அதனை பற்றி தெரிவிக்காமல் இது போன்ற செய்தியையே மீண்டும் மீண்டும் நம் மேல் திணிக்கிறார்கள். அதே போல ஒரு நிலைமை தான் இதுவும். தனி ஒரு மனதினுக்கு உணவில்லையே ஜகத்தை அழித்துவிட வேண்டும் என்று எழுதிய பாரதியையே பட்டினி போட்டவர்கள் தானே இந்த நாட்டினர். உயிரோட இருக்கும் போது பைத்தியக்காரன், செத்தால் மகாகவி. அதை எல்லாம் ஒன்னும் பண்ண முடியாது சபிக்கப்பட்ட ஒரு இனமாக நாம் இருக்கிறோம் என்று கூறியுள்ளார் சீமான்.

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment