SAC பத்தி எதிர்நீச்சல் மாரிமுத்து பேசுனது ரொம்ப தப்பு.! விமர்சித்த ரட்சிதா முன்னாள் கணவர் தினேஷ்.!

வெளியிட்டது

கிழக்கு வாசல் தொடரில் தன்னை நடிக்க ராதிகா சரத்குமார் அணுகியதாகவும் ஆனால் தான் முடியாது என்று மறுத்து விட்டதால் அந்த கதாபாத்திரத்திற்கு தளபதி விஜயின் தந்தை எஸ் ஏ சந்திரசேகரை தேர்வு செய்துள்ளதாகவும் சமீபத்தில் மாரிமுத்து ஒரு பேட்டியின்போது பேசியிருந்தார். இந்த நிலையில் இதுகுறித்து ரட்சிதாவின் முன்னாள் கணவரும் கிழக்கு வாசல் தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கும் தினேஷ் கோபால்சாமி தற்போது வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில் மாரிமுத்து பேசியது தவறு என்று அவர் தனது கருத்தை பதிவு செய்திருக்கிறார். சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் ஆதி குணசேகரன் என்கிற கதாபாத்திரத்தில் நடித்து பலர் மனங்களை கொள்ளை கொண்டவர் மாரிமுத்து. பல படங்களை இவர் இயக்கியும் இருக்கிறார், பல படங்களில் நடித்தும் இருக்கிறார். ஆனால் இவருக்கு தற்போது திருப்பமுனையாக அமைந்த ஒரு தொடர் என்று சொன்னால் அதை எதிர்நீச்சல் தான். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

SAC பத்தி எதிர்நீச்சல் மாரிமுத்து பேசுனது ரொம்ப தப்பு.! விமர்சித்த ரட்சிதா முன்னாள் கணவர் தினேஷ்.! 1
எதிர்நீச்சல் சீரியலுக்கு பின்னர் மாரிமுத்துவின் மவுசு அபரிமிதமாக உயர்ந்து இருக்கிறது. பலரும் மாரிமுத்துவை அழைத்து பேட்டி எடுப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் மாரிமுத்து தற்போது ஒரு பேட்டி ஒன்றை அளித்திருந்தார். அதில் விஜய் டிவியில் விரைவில் ஒளிபரப்பாக இருக்கும் கிழக்கு வாசல் சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ராதிகா சரத்குமார் தன்னை அணுகியதாகவும், ஆனால் தன்னால் வர முடியாது என்று சொல்லி தான் மறுத்துவிட்டதாகவும் பேசி இருந்தார். தற்போது இது குறித்து விமர்சித்து இருக்கும் ரட்சிதாவின் முன்னாள் கணவரும் கிழக்கு வாசல் தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கும் தினேஷ், “மாரிமுத்து ஒரு சீனியர் நடிகர், அவர் எஸ்ஏ சந்திரசேகர் குறித்து பேசியது ஏற்புடையதாக இல்லை, இது என்னுடைய தனிப்பட்ட கருத்து, ஒருவர் ஒரு நாடகத்தில் நடித்துவிட்டு அவர் அந்த நாடகத்திலிருந்து விலகினாலோ அல்லது அந்த கதாபாத்திரத்திற்கு வேறு ஒருவர் நடிக்க இருந்தாலும் அது குறித்து பேசாமல் இருப்பதே நல்லது.


மாரிமுத்துவின் பேட்டியை பார்த்த பலரும் தனக்கு இன்ஸ்டாகிராமில் மெசேஜ் செய்து இது குறித்து கேள்வி எழுப்பி வருகின்றனர். அதற்கு பதில் அளிக்கும் விதமாக தினேஷ் தற்போது இந்த வீடியோவை வெளியிட்டு இருக்கிறார், எதிர்நீச்சல் சீரியலில் மாரிமுத்துவிற்கு முன்பாக பலரையும் தேர்வு செய்திருப்பார்கள், ஆனால் மாரிமுத்து தற்போது அந்த கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்து வருகிறார், ஆனால் முன்பு தேர்வு செய்யப்பட்டவர்கள் குறித்து பேசுவது ஏற்புடையதாக இருக்காது, நான் தற்போது கூறுவது அனைத்தும் என்னுடைய தனிப்பட்ட கருத்து, இது சிலருக்கு ஏற்புடையதாக இருக்கலாம் இல்லை ஏற்பில்லாமல் இருக்கலாம், ஆனால் ஒரு நடிகருக்கு பல இடங்களிலிருந்து பேசுவார்கள், பலருக்கு அது நடிக்க முடியாமல் போகலாம், அதற்கு பல காரணங்கள் இருக்கலாம், ஆனால் அதை இப்படி பொதுவெளியில் கூறுவது ஏற்புடையதாக இல்லை என்று பேசி இருக்கிறார். அந்த வீடியோவை நீங்களும் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்.! Watch the Below Video..!

 

Youtube Video Code Embed Credits: Viral Videos 3.O

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்