MS தோனியிடம் தனது சட்டையில் ஆட்டோகிராப் வாங்கிய விக்னேஷ் சிவன்.! வைரலாகும் வீடியோ இதோ.!

இயக்குனரும் நயன்தாராவின் கணவருமான விக்னேஷ் சிவன் தற்போது தனது சமூக வலைதள பக்கத்தில் ஒரு சில புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்திருக்கிறார். அதில் எம் எஸ் தோனியிடம் தனது டி-ஷர்டில் கையெழுத்து வாங்குவது போன்ற வீடியோவை அவர் பகிர்ந்து உருக்கமாக பதிவிட்டு இருக்கிறார். தமிழ் திரையுலகின் வளர்ந்து வரும் இயக்குனர்களில் ஒருவராக இருப்பவர் இயக்குனர் விக்னேஷ் சிவன், இவர் போடா போடி என்கிற படத்தை இயக்கியதன் மூலமாக தமிழ் திரையுலகில் இயக்குனராக அறிமுகமானார். பின்னர் இவர் விஜய் சேதுபதி மற்றும் நயன்தாராவை வைத்து இயக்கிய நானும் ரவுடிதான் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்த படத்தை இயக்கிக் கொண்டிருந்தபோது அதன் ஹீரோயினாக இருந்த நயன்தாராவுடன் விக்னேஷ் இவனுக்கு காதல் மலர்ந்தது. சுமார் ஏழு ஆண்டுகளாக காதலித்து வந்த இவர்கள் கடந்த வருடம் சென்னை மகாபலிபுரம் ரிசார்ட்டில் வைத்து திருமணம் செய்து கொண்டனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

MS தோனியிடம் தனது சட்டையில் ஆட்டோகிராப் வாங்கிய விக்னேஷ் சிவன்.! வைரலாகும் வீடியோ இதோ.! 1

விளம்பரம்

பின்னர் தானா சேர்ந்த கூட்டம், பாவக் கதைகள் காத்து வாக்குல ரெண்டு காதல் போன்ற படங்களையும் இயக்கி இருக்கிறார். ரவுடி பிக்சர்ஸ் என்டர்டைன்மெண்ட் என்கிற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி கடைசியாக தனது மனைவியை வைத்து கனெக்ட் என்கிற திரைப்படத்தையும் அவர் தயாரித்திருந்தார். இது மட்டுமல்லாமல் பல படங்களில் பாடலாசிரியராகவும் வேலை பார்த்து வருகிறார் விக்னேஷ் சிவன். சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் அவர் தனக்கு பிறந்த இரட்டை குழந்தைகள் புகைப்படங்களை பகிர்ந்து வருவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் தற்போது அவர் எம் எஸ் தோனியிடம் தன்னுடைய டீ சர்ட்டில் கையெழுத்து வாங்கிய வீடியோ மற்றும் புகைப்படங்களை பகிர்ந்து இருக்கிறார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வரும் தோனிக்கு மக்கள் மட்டுமல்லாமல் திரைப் பிரபலங்களும் மிகப்பெரிய ரசிகர்களாக இருந்து வருகின்றனர். அந்த வகையில் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இருவரும் சென்னை அணியின் தீவிர ரசிகர்களாக இருக்கின்றனர்.

தொடர்புடையவை  முனீஸ் ராஜாவை பிரிந்ததற்கான உண்மையான காரணம் இதுதான்..! ஜீனத் பிரியா அதிர்ச்சி தகவல்.!

MS தோனியிடம் தனது சட்டையில் ஆட்டோகிராப் வாங்கிய விக்னேஷ் சிவன்.! வைரலாகும் வீடியோ இதோ.! 3

விளம்பரம்

தற்போது எம் எஸ் தோனி தான் தொடங்கி இருக்கும் தயாரிப்பு நிறுவனத்தின் மூலமாக எல்.ஜி.எம் என்கிற படத்தை தயாரித்து இருக்கிறார். இதற்காக அவர் நேற்று சென்னைக்கு வந்திருந்தார். அப்போது அவரை சந்தித்திருக்கும் விக்னேஷ் சிவன் தன்னுடைய டி-ஷர்டில் ஆட்டோகிராப் வாங்கி அதை வீடியோவாக பதிவிட்டு இருக்கிறார். மேலும் தன்னுடைய ரோல் மாடல், என் கேப்டன், என் ஹீரோ தோனி தான். இவருக்கு அருகில் இருப்பதை நான் எப்பொழுதும் எமோஷனலாக உணர்கிறேன். அவரைப் பார்க்கும் ஒவ்வொரு முறையும் நான் மகிழ்ச்சி அடைகிறேன், தமிழ் திரைத்துறையில் அவர் படம் எடுத்ததை பார்த்து மகிழ்ச்சி அடைகிறேன். இந்த துறையை தேர்ந்தெடுத்ததற்காக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் நீங்கள் தயாரிக்கும் படங்களுக்கு ஆதரவை வழங்க நாங்கள் தயாராக இருக்கிறோம், சாக்‌ஷி அவர்களையும் தமிழ் சினிமாவிற்கு வரவேற்கிறோம் என்று சொல்லி அந்த வீடியோவை பகிர்ந்து இருக்கிறார். நீங்களும் அந்த வீடியோவை காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!

விளம்பரம்

Youtube Video Embed Code Credits: Viral Videos 3.O

விளம்பரம்

Leave a Comment