பிக்பாஸில் கலந்து கொண்டுள்ள நடிகர் தினேஷ் குறித்து தற்போது அவர்கள் பெற்றோர்கள் கண்ணீர் மல்க சில விஷயங்களை பகிர்ந்து கொண்டுள்ளனர். தனது மகன் வாழ்க்கை குறித்து பேசும் போது உணர்ச்சிவசப்பட்டு கண் கலங்கி இருவரும் அழுதிருக்கின்றனர். சில ஆண்டுகளுக்கு முன்பு கர்நாடகாவை சேர்ந்த ரட்சிதா மகாலட்சுமி தமிழரான தினேஷை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.்இவர்கள் வாழ்க்கை நன்றாக போய்க் கொண்டிருந்த நிலையில் திடீரென இருவரும் பிரிந்து வாழத் தொடங்கினர். இவர்களின் பிரிவுக்கு முக்கிய காரணமாக சொல்லப்பட்டது தினேஷிற்கு பல ஆண்டுகளாக வேலையில்லாமல் இருந்ததும் பின்னர் குழந்தை இல்லாததுமே காரணமாக சமூக வலைத்தளங்களில் வதந்திகள் கிளப்பப்பட்டது. இந்த நிலையில் தொடர்ந்து ரட்சிதா தினேஷுக்கு எதிராக சில கருத்துக்களை சமூக வலைதளத்தில் பகிர்ந்து வருகிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.!

மேலும் தினேஷுக்கும் விசித்ராவிற்கும் ஏழாம் பொருத்தமாக இருக்கும் நிலையில் விசித்ராவிற்கு ஆதரவு கேட்டு அவர் பதிவுகளை பதிவிட்டு வருகிறார். பிக் பாஸில் பெற்றோர்கள் உள்ளே செல்லும் ப்ரீஸ் டாஸ்க் நடைபெற்றிருக்கிறது. இந்த டாஸ்க்கில் பெற்றோர்கள் உள்ளே சென்று வந்த பின்பு சில தொலைக்காட்சி சேனல்களுக்கு பேட்டி அளித்து வருகின்றனர். அப்போது தினேஷின் திருமண வாழ்க்கை குறித்து பேசிய அவர்கள், “தினேஷ் இந்த பிக் பாஸ் சீசன் 7ன் கப்பை வெற்றி பெற்றால் அதை ரட்சிதாவிற்கு சமர்பிப்பதாக கொடுப்பேன் என்று பேசியிருந்தது தங்களுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. எதற்காக அவன் இந்த கோப்பையை ரட்சிதாவிற்கு சமர்ப்பிக்க வேண்டும்? அவருடைய எட்டு வருட வாழ்க்கை முடிந்துவிட்ட கதை. அதையே ஏன் தினேஷ் நினைத்துக் கொண்டிருக்கிறான்? என்று எங்களுக்கு தெரியவில்லை. நாம் எவ்வளவு தூரம் அன்பு செலுத்தினாலும் அவர்களிடமிருந்து அதை எதிர்பார்க்க முடியவில்லை.
ரட்சிதாவின் பெற்றோர்கள் கூட இவர்கள் இருவரும் சேர வேண்டும் என்று நினைக்கிறார்கள். ஆனால் ரட்சிதா மிகப் பிடிவாதமாக இருக்கிறார். அவர்கள் இருவரும் காதலித்தபோது அவர்கள் கதையெல்லாம் எங்களிடம் சொல்லி எங்களையும் சம்மதிக்க வைத்தார்கள். இப்பொழுது சிலர் ரட்சிதாவை தவறாக வழி நடத்துவதால் அவர்கள் பேச்சைக் கேட்டுக்கொண்டு ரட்சிதா தனது வாழ்க்கையைத் தொலைத்துவிட்டார். நாங்கள் அடுத்த கட்டம் குறித்து யோசிக்க வேண்டிய தேவை வந்துவிட்டது.
காதலிக்கிறேன் என்கிற பெயரில் ஒரு காதலிக்கிறார்கள் திருமணம் ஆகி ஒரு வருடத்தில் விவாகரத்து செய்து கொள்கிறார்கள். தற்போதைய காலத்து பெண்களிடம் கற்பனை அதிகமாக இருக்கிறது. படங்களை பார்த்துக் கொண்டும், சமூக வலைதளங்களில் வருவதை பார்த்துக் கொண்டும் அவர்கள் இது போன்ற தவறான முடிவை எடுக்கிறார்கள். தினேஷ் காதலித்தபோது கூட என்னுடைய பெற்றோர்கள் சம்மதம் இருந்தால் தான் திருமணம் செய்து கொள்வேன் என்று பிடிவாதமாக இருந்தார்.
ஆனால் அவர்கள் தாய் தந்தையர் எங்களைப் பேசி சமாதானம் செய்து இந்த திருமணத்தை நடத்தினர். நாங்களும் மிகப் பிரம்மாண்டமாக திருமணம் செய்து வைத்தோம். தற்போது அவர்கள் குறித்து பேசக்கூட எங்களுக்கு விருப்பமில்லை. நாங்கள் தினேஷ் வெளியே வந்த பிறகு விவாகரத்துக்கு அவர் கூறினால் நாங்கள் விவாகரத்து கொடுக்க கூட தயாராக இருக்கிறோம். ஆனால் சட்டென்று ஒரு பெண்ணின் வாழ்க்கை கெடுக்க எங்களுக்கு மனது வரவில்லை. நாங்கள் முடிந்த அளவு முயற்சி செய்து பார்ப்போம்.
ரட்சிதாவின் அப்பா இல்லாத காரணத்தினால் எங்களால் மேற்கொண்டு எதுவும் செய்ய முடியவில்லை. எனவே முடிந்த அளவு முயற்சி செய்வோம், ஒத்து வரவில்லை என்றால் விவாகரத்து கோருவோம்” என்று பேசினர் அப்போது உணர்ச்சிவசப்பட்டு இருவரும் கண்கலங்கியது பார்ப்பவர்களை நெகிழ்ச்சி அடைய வைத்தது. நீங்களும் அந்த வீடியோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!
YouTube Video Embed Code Credits: Tele Vikatan