விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘மகாநதி’ சீரியலின் இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் விஜய் மற்றும் காவேரி இருவரின் கண்களில் மண்ணை தூவி விட்டு, பசுபதி தனது மகள் ராகிணிக்கும், விஜய்யின் தம்பி அஜய்க்கும் திருமணத்தை முடித்துள்ளார். யாருக்கும் தெரியாமல் ரகசியமாக இந்த திருமணத்தை பசுபதி நடத்தி முடித்திருக்கிறார் அந்த ப்ரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

விஜயும் காவேரியும் ஒரு வருட ஒப்பந்தத்தில் திருமணம் செய்து கொள்கின்றனர். காவேரியின் பரம எதிரியாக இருக்கும் பசுபதி காவேரிக்கு குடைச்சல் கொடுக்கும் விதமாக, தனது மகள் ராகிணியை விஜயின் தம்பி அஜய்க்கு திருமணம் செய்து வைக்க முடிவெடுக்கிறார். இந்த திருமணத்தை காவேரி எப்படியோ தடுத்து நிறுத்துகிறார். ஆனால் பசுபதி ராகிணிக்கும், அஜய்க்கும் திருமணத்தை தற்போது முடித்திருக்கிறார். யாருக்கும் தெரியாமல் கோவிலில் ரகசியமாக வைத்து இருவருக்கும் திருமணம் முடித்திருக்கிறது.

தற்போது தாலியும் கழுத்துமாக வரும் ராகிணி மற்றும் அஜய் இருவரும் காவேரியை வெறுப்பேற்றுவதற்கு நடனம் ஆடிக் கொண்டிருக்கின்றனர். மேலும் அங்கு வரும் பசுபதி இனி உன்னை நான் நிம்மதியாக வாழ விடமாட்டேன் என்று சொல்லி காவேரியிடம் கூறிக் கொண்டிருக்கிறார். அந்த ப்ரோமோ தற்போது வெளியாகியிருக்கிறது. நீங்களும் அந்த ப்ரோமோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!
YouTube Video Embed Code Credits: Vijay Television