கமலஹாசன் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘இந்தியன் 2’ திரைப்படத்தின் முதல் சிங்கிள் பாடலின் லிரிக்கல் வீடியோவை தற்போது படக்குழுவினர் வெளியிட்டு இருக்கின்றனர். இயக்குனர் சங்கர் – கமலஹாசன் கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம்தான் ‘இந்தியன் 2’ இந்த படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் முடிந்து, படம் வெளியீட்டுக்கு தயாராகி வருகிறது. வருகிற ஜூலை 12ம் தேதி படம் வெளியாக இருப்பதாக ஏற்கனவே அறிவிப்பு வெளியாகி உள்ளது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தில் கமலஹாசனுடன் இணைந்து நடிகர்கள் சித்தார்த், காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், எஸ்.ஜே சூர்யா, விவேக், நெடுமுடி வேணு, சமுத்திரக்கனி, பிரியா பவானி சங்கர், மனோ பாலா உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். நேற்று படக்குழுவினர் பாடலின் முதல் சிங்கிள் லிரிக்கல் வீடியோ இன்று வெளியிடப்படும் என அறிவித்திருந்தனர். அதன்படி தற்போது வீடியோ வெளியாகி இருக்கிறது.

வெளியான சில நிமிடங்களில் லட்சக்கணக்கான பார்வையாளர்களை பெற்றுள்ளது. லைகா ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். தற்போது வெளியாகி இருக்கும் “பாரா..” பாடலின் வரிகளை பாடலாசிரியர் பா.விஜய் எழுதியிருக்கிறார். நீங்களும் அந்த பாடலை காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!
YouTube Video Embed Code Credits: Sony Music South