Categories: சினிமா

மனைவிக்காக புது நிறுவனத்தை தொடங்கிய டைரக்டர் ஹரி..! ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்த சூர்யா.!

வெளியிட்டது

இயக்குனர் ஹரி மற்றும் ப்ரீத்தா ஆகியோர் தொடங்க இருக்கும் புதிய ஸ்டுடியோவை நடிகர் சூர்யா மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் இணைந்து இன்று காலை தொடங்கி வைத்திருக்கின்றனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

மனைவிக்காக புது நிறுவனத்தை தொடங்கிய டைரக்டர் ஹரி..! ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்த சூர்யா.! 1

அந்த நிகழ்ச்சிக்கு நடிகர் சூர்யா வேட்டி சட்டையில் வந்து ரிப்பன் கட் செய்து நிகழ்ச்சியை தொடங்கி வைத்திருக்கிறார். 2003 ஆம் ஆண்டு வெளியான சாமி என்கிற படத்தை இயக்கத்தின் மூலமாக தமிழ் திரையுலகுக்கு இயக்குனர் அறிமுகம் ஆனவர் இயக்குனர் ஹரி.

இதன் பின்னர் அவர் கோவில், தாமிரபரணி, அருள், ஐயா, வேல், சிங்கம் போன்ற படங்களை கொடுத்திருக்கிறார். நடிகர் சூர்யாவை வைத்து மட்டும் சிங்கம் பாகம் ஒன்று, இரண்டு, மூன்று என மூன்று படங்களை இயக்கியிருக்கிறார்.

கடைசியாக தனது மனைவியின் அண்ணன் அருண் விஜயை வைத்து யானை படத்தை இயக்கியிருந்தார். இயக்குனர் ஹரிக்கும் நடிகை பிரீத்தாவிற்கும் திருமணம் ஆகி குழந்தைகளும் இருக்கிறார்கள்.

இந்த நிலையில் தற்போது பிரீத்தாவிற்காக நவீன வசதிகளுடன் கூடிய குட்லக் ஸ்டூடியோ என்கிற நிறுவனத்தை இருவரும் இணைந்து தொடங்கி இருக்கின்றனர்.

திரைத்துறை பணிகளுக்கான ரெக்கார்டிங், டப்பிங், எடிட்டிங் போன்ற பணிகளை செய்வதற்காக நவீன வசதிகள் மற்றும் புதிய தொழில்நுட்பங்களுடன் கூடிய அந்த ஸ்டுடியோவை அவர்கள் தொடங்கி இருக்கிறார்கள். இந்த விழாவிற்கு நடிகர் சூர்யா, சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு, அமைச்சர்கள் அனிதா ராதாகிருஷ்ணன், பிகே சேகர் பாபு, நடிகர் விஜயகுமார், ஸ்ரீதேவி விஜயகுமார் ஆகியோர் குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தனர்.

முன்னதாக ஸ்டூடியோவிற்கு வேட்டி சட்டையில் வருகை தந்த சூர்யா ரிப்பன் கட்டி புதிய கட்டிடத்தை திறந்து வைத்தார். விஜயகுமாருக்கு சொந்தமான குட்லக் ரிவியூ திரையரங்கம் 40 வருட பாரம்பரியம் கொண்டது.


இந்தத் திரையரங்கம் சென்னையில் ஒரு முக்கிய அடையாளமாக விளங்கிக் கொண்டிருந்தது. பல திரை ரசிகர்களின் வாழ்வில் மறக்க முடியாத ஒரு இடத்தையும் இந்த திரையரங்கம் பிடித்திருக்கிறது. முன்னாள் முதல்வராக இருந்த எம் ஜி ஆர், கலைஞர், ஜெயலலிதா, ஸ்டாலின் ஆகியோர் இந்த தியேட்டரில் திரைப்படம் பார்த்து ரசித்திருக்கிறார்கள்.

மிகவும் பழைய அரங்கமாக இருந்த இந்த திரையரங்கம் தற்போது குட்லக் ஸ்டுடியோஸ் என்கிற பெயரில் மீண்டும் சாலிகிராமத்தில் புதிதாக உதயமாகிறது. இதை ஹரி மற்றும் ப்ரீத்தா ஆகிய இருவரும் இணைந்து துவங்கி இருக்கின்றனர். குறிப்பாக மனைவிக்காக இந்த நிறுவனத்தை தொடங்கி இருக்கிறார் இயக்குனர் ஹரி.

இந்த நிறுவனத்தின் தொடக்க விழாவின் வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி இருக்கிறது. முதல் ஆளாக டப்பிங் பேசி இந்த விழாவை சிறப்பித்து இருக்கிறார் நடிகர் சூர்யா. நீங்களும் அந்த வீடியோவை காண கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!

 

YouTube Video Embed Code Credits: SS Music

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்