இன்ஸ்டாகிராமில் இணைந்த தளபதி.! இணைந்த உடனேயே லியோ படத்தில் இருந்து மாஸான போட்டோவை பகிர்ந்த தளபதி.!

தளபதி விஜய் ஏற்கனவே ட்விட்டர் பக்கத்தில் இருக்கும் நிலையில் தற்போது instagram பக்கத்தில் இணைந்திருக்கிறார். மேலும் லியோ படத்திலிருந்து செம மாஸான ஒரு போட்டோவை தனது முகப்பு பக்கமாக அவர் வைத்திருக்கிறார். இந்த புகைப்படம் தற்போது 1.6 மில்லியனுக்கும் அதிகமான லைக்குகளை குவித்து வருகிறது. மேலும் அவர் இணைந்த சில நிமிடங்களில் அவருக்கு ப்ளு டிக்கும், 1.6 மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோவர்ஸ் கிடைத்திருக்கிறார்கள். தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களாக வலம் வருபவர் நடிகர் விஜய். இவரும் சரி, நடிகர் அஜித்தும் சரி லட்சக்கணக்கில் ரசிகர்களை வைத்திருந்த போதிலும் இருவரும் சமூக வலைத்தளங்களில் அதிகமாக ஈடுபாடு காட்டுவதில்லை. மற்ற நடிகர்கள் அனைவரும் சமூக வலைதளமான ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மிக ஆக்டிவாக இருக்கும் நிலையில், இவர்கள் இருவருமே அந்த அளவிற்கு ஈடுபாடு காட்டுவதில்லை. இவர்களின் செயல்பாடுகள் மற்றும் புகைப்படங்கள் கூட யார் மூலமாவது தான் நம்மால் தெரிந்து கொள்ள முடியும். அந்த அளவிற்கு அஜீத் மற்றும் விஜய் இருவரும் சமூக வலைத்தளங்களில் ஈடுபாடு இல்லாமல் இருந்து வந்தனர்.

தொடர்புடையவை  திரைத்துறையில் இருக்கானால என் மகளுக்கு ப்ரெண்ட்ஸே இல்லை.. கண்கலங்கி அழுத அர்ச்சனா

இன்ஸ்டாகிராமில் இணைந்த தளபதி.! இணைந்த உடனேயே லியோ படத்தில் இருந்து மாஸான போட்டோவை பகிர்ந்த தளபதி.! 1

விளம்பரம்

அஜித் பற்றிய விவரங்களையும் அவர் வெளிநாடு செல்லும் பொழுதும் பைக் ரைடு செல்லும் போதும் எடுக்கப்படும் புகைப்படங்களை அவரது மேனேஜர் அவருடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்வதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார். பின்னர் சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் இணைந்த அஜீத் மனைவி ஷாலினி தனது குடும்பப் படங்களை அவ்வப்போது பதிவேற்றி வருகிறார். விஜய் பற்றி மக்கள் தெரிந்து கொள்வதற்காக விஜய்யும் சமூக வலைதள பக்கத்தில் இணைய வேண்டும் என்று ரசிகர்கள் ஆர்வமாக இருந்தனர். இந்த நிலையில் தற்போது விஜயும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இணைந்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்திருக்கிறார். அவர் இணைந்த உடனேயே சில நிமிடங்களில் சுமார் 1.6 மில்லியனுக்கும் அதிகமான பின் தொடர்பவர்கள் அவரை பின்தொடர்ந்து இருக்கிறார்கள். இன்ஸ்டாகிராமம் ப்ளூ டிக் கொடுத்து அவரது பக்கத்தை அதிகாரப்பூர்வமாக உறுதி செய்து இருக்கிறது. இன்ஸ்டாகிராமில் இணைந்த உடனேயே முதல் படமாக லியோ படத்திலிருந்து ஒரு மாஸான புகைப்படத்தை பகிர்ந்து இருக்கிறார்.

இன்ஸ்டாகிராமில் இணைந்த தளபதி.! இணைந்த உடனேயே லியோ படத்தில் இருந்து மாஸான போட்டோவை பகிர்ந்த தளபதி.! 3தற்போது தனது 67 வது படமான லியோ படத்தில் நடித்து வருகிறார் விஜய். இவருடன் இணைந்து ஜோடியாக நடிகை திரிஷா நடித்து வருகிறார். மேலும் சஞ்சய் தத், மிஷ்கின், கௌதம் மேனன், பிரியா ஆனந்த் உள்ளிட்ட பல பிரபலங்கள் இந்த படத்தில் இணைந்திருக்கின்றனர். இந்த நிலையில் தற்போது instagramல் இணைந்து இருக்கும் அவர் தொடர்ந்து தன்னுடைய புகைப்படங்கள் மற்றும் படங்களின் விவரம் பற்றி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களுக்காக வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காஷ்மீரில் லியோ படம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சமீபத்தில் படக்குழுவின் சென்னைக்கு திரும்பியிருந்தனர். விரைவில் அடுத்த கட்ட படப்பிடிப்புகள் எடுக்கப்படும் என்று கூறப்படும் நிலையில் தற்போது விஜய் இன்ஸ்டாகிராமில் இணைந்திருக்கிறார். எனவே தொடர்ந்து தனது ரசிகர்களுக்காக லியோ படம் குறித்தும் அடுத்தடுத்த படங்கள் குறித்தமான அப்டேட்களை அந்த பக்கத்தில் அவர் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விளம்பரம்

 

View this post on Instagram

 

A post shared by Vijay (@actorvijay)

விளம்பரம்

Leave a Comment