Categories: சினிமா

மாமியாரின் 90வது பிறந்தநாளை கொண்டாடிய இயக்குனர் மணிரத்தினம்..! கண்கலங்கிய மனைவி சுஹாசினி..!

வெளியிட்டது

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனர்களில் ஒருவர் மணிரத்தினம். இவரின் இயக்கத்திற்கு என்று மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமே இருக்கிறது. இவர் பிரம்மாண்ட இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் படம் மாபெரும் வெற்றிபெற்றது. மேலும் தேசிய விருதுகளையும் பெற்று இருக்கிறது. இதனை தொடர்ந்து மணிரத்தினம் நடிகர் கமல்ஹாசனை வைத்து தக் லைஃப் படத்தினை இயக்கி வருகிறார்.

மாமியாரின் 90வது பிறந்தநாளை கொண்டாடிய இயக்குனர் மணிரத்தினம்..! கண்கலங்கிய மனைவி சுஹாசினி..! 1

இப்படத்தில் நடிகர் சிம்பு மற்றும் த்ரிஷா என பலரும் நடித்து வருகின்றனர். இப்படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் உருவாகி இருக்கிறது. இவர் நடிகை சுஹாசினியை திருமணம் செய்துகொண்டார். இவருக்கு மகன் ஒருவர் உள்ளார். சுஹாசினியின் தாய் 90வயதை தொட்டு உள்ள நிலையில் அவர்களின் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடி உள்ளார் மணிரத்தினம்.

இந்த பிறந்தநாள் புகைப்படங்களை நடிகை சுஹாசினி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு உள்ளார். இந்த புகைப்படங்களை பார்த்த அவரது ரசிகர்கள் சுஹாசினியின் தாயாருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

வெளியிட்டது

புதிய செய்திகள்