கூகிள் பே-ல 10000 அனுப்ப முடியுமா? மோகன்ஜி பெயரில் போலி முகநூல் கணக்கு..வீடியோ வெளியிட்டு கதறும் மோகன் ஜி

வெளியிட்டது

நாம் அனைவருக்குமே முகநூலில் இது போல் ஒரு மெசேஜ் வந்திருக்கும், நமக்குத் தெரிந்தவர்கள் புகைப்படத்தை பயன்படுத்தி புதிதாக ஒரு கணக்கை தொடங்கி அதன் மூலமாக நம் நட்பில் சிலர் இணைந்து விடுவார்கள். இணைந்துவிட்ட அடுத்த நிமிடமே உங்களிடம் கூகுள் பே இருக்கிறதா? பத்தாயிரம் ரூபாய் அனுப்ப முடியுமா? நாளை காலை திருப்பி தந்து விடுகிறேன் என்று கூறுவார்கள். இந்த பிரச்சனையை சந்திக்காத நபர்களே இல்லை என்று கூறும் அளவிற்கு முகநூல் பயன்படுத்தும் ஒவ்வொருவருக்கும் இது போன்ற சம்பவம் நடந்திருக்கும். அப்படி ஒரு சம்பவம் தான் திரௌபதி, ருத்ரதாண்டவம் போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் மோகன்ஜிக்கும் நடந்துள்ளது. மோகன்ஜியின் பெயரில் முகநூலில் போலி கணக்கு ஒன்றை உருவாக்கி கூகுள் பேயில் பத்தாயிரம் அனுப்புமாறு பலருக்கும் தொடர்ந்து மெசேஜ் வந்த வண்ணம் இருந்துள்ளது. இதைப் பார்த்த மோகன் ஜி தற்போது அவரே ஒரு விளக்கம் கொடுத்து வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்.

கூகிள் பே-ல 10000 அனுப்ப முடியுமா? மோகன்ஜி பெயரில் போலி முகநூல் கணக்கு..வீடியோ வெளியிட்டு கதறும் மோகன் ஜி 1

தொழில்நுட்பம் வளர்ந்து விட்ட இந்த காலத்தில் ஏமாற்றுபவர்கள் பல வகையில் இருக்கிறார்கள். அதிலும் குறிப்பாக முகநூலில் சில வட இந்திய இளைஞர்கள் மற்றவர்களின் புகைப்படங்களை திருடி அவர்களைப் போலவே புதிதாக ஒரு கணக்கை உருவாக்கி, அவர்களின் நட்பு வட்டத்தில் இருக்கும் அனைவருக்கும் ரிக்வெஸ்ட் கொடுப்பார்கள். அதை நம்பி பலரும் அந்த புது ஐடி-ஐ நட்பில் இணைத்து விடுவார்கள். இணைப்பில் வந்த அடுத்த நொடியே அந்த ஃபேக் ஐடி இடம் இருந்து ஒரு மெசேஜ் வரும். அதில் உங்களிடம் கூகுள் பே இருக்கிறதா? என்று முதல் கேள்வியை கேட்பார்கள். நாம் ஆம் இருக்கிறது என்று பதில் அளித்தால் பத்தாயிரம் ரூபாய் அவசரமாக தேவைப்படுகிறது, உடனடியாக அனுப்பவும் என்று கூறுவார்கள். நாம் அதை ஃபேக் ஐடி என்று கண்டுபிடித்து விட்டால், உடனே நம்மை பிளாக் செய்து விட்டு ஓடி விடுவார்கள். இதை பெரும்பாலும் தமிழ் தெரியாத வட இந்தியாவை சேர்ந்த இளைஞர்கள் தான் செய்கிறார்கள் என்ற ஒரு கருத்து பொதுவாக இருந்து வருகிறது.

அதேபோல இப்போது மோகன்ஜி பெயரில் அவரது புகைப்படத்தை பயன்படுத்தி ஒரு முகநூல் கணக்கு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. அதிலிருந்து தொடர்ந்து அனைவருக்கும் பத்தாயிரம் வேண்டுமென்று மெசேஜ் சென்றுள்ளது. இதைப் பார்த்து அதிர்ச்சிக்கு உள்ளான மோகன்ஜி தற்போது ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டு விளக்கம் அளித்துள்ளார். 25க்கு மேற்பட்டவர்களுக்கு இதுபோல் மெசேஜ் சென்றுள்ளதாகவும், ஆனால் யாரும் பணம் கொடுத்து ஏமாறவில்லை என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார். அதை யாரும் நம்ப வேண்டாம் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.இதை பார்த்த பலரும் வட இந்திய இளைஞர்கள் கடைசியில் நம்ம ஷத்திரியரிடமே கை வைத்து விட்டார்களே என்றும், இது என்னடா ஷத்திரியனுக்கு வந்த சோதனை என்றும் கலாய்த்து வருகின்றனர். அந்த வீடியோவை நீங்களும் காண.. Watch the below Video..

Youtube Video Code Embed Credits: Tamil Viral videos 24×7

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்