ரசிகர்களை ஏமாற்றிய தி க்ரே மேன்..ட்ரைலரில் தனுஷை தேட வேண்டியதா இருக்கு | The Gray Man

தனுஷ் நடத்த ஹாலிவுட் படமான “தி கிரே மேன் படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது”. ஆனால் தனுஷின் காட்சிகள் மிக குறைவாக உள்ளதால் ரசிகர்கள் பெரும் ஏமாற்றத்தில் உள்ளனர். தமிழின் முண்ணனி நடிகர்களில் ஒருவர்தான் தனுஷ். இவர் சிறு வயதிலேயே திரைப்படத்துறையில் தனது பயணத்தைத் தொடங்கி தற்போது வெற்றி நாயகனாக வலம் வருகிறார். ஆரம்பத்தில் பல அவமானங்களை சந்தித்த போதிலும் தற்போது பாலிவுட், ஹாலிவுட், கோலிவுட் என அனைத்து தளங்களிலும் முத்திரை பதித்து வருகிறார். நடிப்பது மட்டுமில்லாமல் பாடுவது, பாடல் எழுதுவது, நடனம், படத்தயாரிப்பு என அனைத்திலும் சாதனை படைத்து வருகிறார் நடிகர் தனுஷ் அவர்கள். வீடியோ கீழே உள்ளது..

ரசிகர்களை ஏமாற்றிய தி க்ரே மேன்..ட்ரைலரில் தனுஷை தேட வேண்டியதா இருக்கு | The Gray Man 1
இவர் படங்களை தயாரிப்பதற்காக கடந்த 2010ம் ஆண்டு வொண்டர்பார் ஃபிலிம்ஸ் என்னும் நிறுவனத்தை தொடங்கினார். இவர் ஹிந்தியில் ராஞ்சனா, அட்ரங்கி ரே போன்ற படங்களில் நடித்துள்ளார். பிறகு 2018ம் ஆண்டு ஹாலிவுட்டில் “The Extordinary Journey of the Fakir” என்ற படத்தில் அறிமுகமானார். பிறகு அதே நிறுவனத்துடன் இணைந்து தி கிரே மேன் என்ற படத்திலும் நடித்தார். இந்த படத்தின் போஸ்டர் வெளியான போது கெத்தான லுக்கில் காணப்பட்டார் தனுஷ். இதை பார்த்த ரசிகர்கள் தனுஷை பாராட்டித் தள்ளினர். இந்த படம் ஜூலை 22 நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் வெளியாகும் என அறிவித்து இருந்தார் தனுஷ். இதனால் தனுஷ் ரசிகர்கள் பெரும் ஆவலில் இருந்தனர். Youtube Video Code Embed Credits: Netflix

விளம்பரம்

ரசிகர்களை ஏமாற்றிய தி க்ரே மேன்..ட்ரைலரில் தனுஷை தேட வேண்டியதா இருக்கு | The Gray Man 3

தற்போது இந்த படத்தின் ட்ரைலர் காட்சிகள் வெளியாகியுள்ளது. சண்டைகள் நிறைந்த இந்த விறுவிறுப்பான ட்ரைலரில் தனுஷ் சில இடங்களில் மட்டுமே தோன்றுவதால் ரசிகர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர். போஸ்டரில் மட்டும் கெத்து காண்பித்துவிட்டு ட்ரைலரில் ஒன்றும் காணோமே என்றும் சிலர் கலாய்த்து வருகின்றனர். தனுஷ் நடித்த அந்த படத்தின் ட்ரைலரை நீங்களும் காண..Watch the below Video..

விளம்பரம்
தொடர்புடையவை  HIPHOP ஆதி இயக்கி நடிக்கும் கடைசி உலகப்போர் படத்தின் FirstSingle வெளியாகியது..!

விளம்பரம்

Leave a Comment