அவர் மாதிரிலாம் ஆட முடியாது!!இது என்னோட அரபிக் குத்து!!!கலக்கும் டி.ஜே.பிராவோ!!!

இந்த வருட ஐபில் போட்டியில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, 9 ஆவது இடம் பிடித்து 14 ஆட்டங்களில் வெறும் 4கில் மட்டுமே வென்று ரசிகர்களை ஏமாற்றியது. 2008 ஆண்டு முதல் நடைபெறும் ஐபில் போட்டியில் சென்னை அணி அடுத்து சுற்றிற்கு தகுதி பெறாமல் வெளியேறுவது இதுவே 2ஆவது முறையாகும் கடந்த 2020ஆம் ஆண்டும் பிளே – ஆஃப் சுற்றிற்கு தகுத்தி பெறாமல் வெளியேறியது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரசிகர்களுக்கு மிக பெரிய ஒரு எமோஷன். அணியில் விளையாடும் ஒவ்வொரு வீரரையும் தங்கள் சொந்த ஊர் மக்கள் போல் அன்பு பாராட்டி, தங்கள் அபிமானத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

விளம்பரம்

அவர் மாதிரிலாம் ஆட முடியாது!!இது என்னோட அரபிக் குத்து!!!கலக்கும் டி.ஜே.பிராவோ!!! 1

சென்னை அணிக்கு தலைமை தாங்கும் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனி சென்னைக்கு மிகவும் பிடித்தமான நட்சத்திர கிரிக்கெட் வீரராக உள்ளார். அவர் சர்வதேச போட்டிகளில் இருந்து ஒய்வு அறிவித்த பிறகும், இன்னும் கொஞ்ச இன்னும் கொஞ்சம் என அவரை தொடர்ந்து சென்னை அணிக்காக விளையாட ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகினறனர்.

விளம்பரம்
தொடர்புடையவை  லக்குனா இப்படி இருக்கனும்!!கமல் படத்தில் ரஜினியுடன் இணையும் சிவகார்த்திகேயன்.

அதே போல் தான் சென்னை அணியின் சுரேஷ் ரெய்னா, ரவீந்திர ஜடேஜா, மைக் ஹசி போன்றோரும். இதில் முக்கிய வெளிநாட்டு வீரர் டி.ஜே.பிராவோ. இவர் அணிக்கு வாங்க பட்டது முதலே ரசிகர்களை தன்னுடைய விளையாட்டு திறமையாலும், நடன அசைவுகளாலும் கவர்ந்தார்.

குறிப்பாக இவர் கேட்ச் பிடித்தால் அவர் ஆடும் நடனம் ரசிகர்கள் பலருக்கும் ஃபவரெட். சில ஆண்டுகளாக இவர் சென்னையில் நடைபெறும் சில தனியார் நிகழ்ச்சிகளிலும் பங்கேது வருகிறார். பள்ளி விழா ஒன்றில், சினிமா விருது வழங்கும் நிகழ்ச்சி ஒன்றில் என சென்னை ரசிகர்களிடம் தொடர்ந்து தொடர்பிலேயே உள்ளார்.

விளம்பரம்

அவர் மாதிரிலாம் ஆட முடியாது!!இது என்னோட அரபிக் குத்து!!!கலக்கும் டி.ஜே.பிராவோ!!! 3

இதற்கெல்லாம் ஒரு படி மேலே சென்று, தமிழ் படமான சித்திரம் பேசுதடி 2 படத்தில், கானா பாலாவுடன் இணைந்து “ஏன்டா” என்ற பாடல் பாடி, அதில் நடித்தும் இருந்தார். படத்திற்கு இதுவே பெரிய ப்ரோமோஷனாக அமைந்தது.

விளம்பரம்

தன்னுடைய சொந்த முயற்சியில், சொந்தமாக சில பாடலும் படி வெளியிட்டுள்ளார். இவர் இப்பொது நடிகர் விஜய் நடிப்பில், அனிருத் இசையமைத்திருந்த “அரபிக் குத்து” பாடலுக்கு தன்னுடைய பாணியில் நடனம் ஆடி வீடியோ வெளியிட்டுள்ளார்.

தொடர்புடையவை  கார்த்தியை கபடியில் சுலபமாக சாய்த்து போட்ட அதிதி.. இந்த பொண்ணுக்குள்ள எவளோ திறமை இருக்கு

அந்த வீடியோவில் இவர் போட்டிருக்கும் டீ-ஷர்ட்டில் 7 என்ற நம்பர் போட்டு இருக்கிறது. இது நம் தல டோனியின் ஜெர்சி நம்பராகும். தல நம்பர், தளபதி பாட்டு என டான்ஸ் ஆடி ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளார் மேற்கு இந்திய தீவுகளை சேர்ந்த கிரிக்கெட் வீரர் டி.ஜே.பிராவோ.

விளம்பரம்

Video Courtesy – Galatta Tamil

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment