ஒரு முறையாவது எங்கள வந்து பாத்துட்டு போடா விஜய்…கண்கலங்கிய சந்திரசேகர் | Vijay

என் மகன், எங்களுடன் மாசத்திற்கு ஒரு முறையாவது பேச வேண்டும் என்று நடிகர் விஜயின் அப்பா கோரிக்கை விடுத்துள்ளார். தமிழ்நாட்டில் எஸ்ஏ சந்திரசேகரை தெரியாத ஆட்களே இருக்க முடியாது எனலாம். அந்த அளவிற்கு புகழ் பெற்ற இயக்குனநராக ஒரு காலத்தில் இருந்தவர். இயக்குனர் மட்டுமில்லாமல் நடிகர், தயாரிப்பாளர் என்று பன்முக திறமை கொண்டவர். இவரின் மகன் பற்றி சொல்லவே தேவையில்லை. சந்திரசேகர் மகன் இவர் என்ற காலம் மாறிப்போய் இவரின் தந்தை சந்திரசேகர் என்ற நிலைமையாகிப் போனது. ஆம் இளைய தளபதி அவர்களின் தந்தைதான் எஸ்ஏ சந்திரசேகர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

ஒரு முறையாவது எங்கள வந்து பாத்துட்டு போடா விஜய்...கண்கலங்கிய சந்திரசேகர் | Vijay 1

விளம்பரம்

பிறகு தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் முண்ணனி நடிகர்களை வைத்து படம் இயக்கியுள்ளார். விஜயகாந்தை வைத்து 19 படங்களும், மகன் விஜயை வைத்து 9 படங்களும் இயக்கியுள்ளார். 80 வயதை நெருங்கிய போதிலும் சமீபத்தில் சிம்பு நடிப்பில் வெளியான “மாநாடு” படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். சமீபகாலமாக இவருக்கும் இவரது மகன் விஜய்க்கும் சண்டை இருப்பதாக சமூக வலைத்தளங்களில் தகவல்கள் பரவி வருகிறது. Video Code Embed Credits: IndiaGlitz

ஒரு முறையாவது எங்கள வந்து பாத்துட்டு போடா விஜய்...கண்கலங்கிய சந்திரசேகர் | Vijay 3

விளம்பரம்

இவரும் விஜயும் 5 ஆண்டுகளாக பேசிக் கொள்ளவில்லை, விஜய் மக்கள் இயக்கத்தை அரசியல் கட்சியாக மாற்றும் எண்ணத்தில் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்ப்பட்டு இருவரும் சரிவர பேசுவதில்லை என்றும் செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. இதற்கிடையில் தற்போது சந்திரசேகர் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் உங்களுக்கு ஒரு அப்பாவாக, விஜய் மாசத்திற்கு ஒரு முறை வந்து தன்னையும்,விஜய் அம்மாவையும் பார்க்க வேண்டும் என்றும், அரை மணி நேரமாவது எங்களிடம் பேச வேண்டும் என்றும் கூறினார். ஏற்கனவே விஜய்க்கும் சந்திரசேகருக்கும் சண்டை என கூறி வரும் நிலையில் இந்த பேட்டி இதை உறுதிப்படுத்துகிறது…Watch the below Video..

தொடர்புடையவை  நீங்கள் ஒரு Pure மேஜிக் அப்பா.! லால் சலாம் படப்பிடிப்பு முடிவடைந்ததை அறிவித்த ஐஸ்வர்யா ரஜினி.!

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment