தமிழில் உதவி இயக்குனராக இருந்து பின்னர் பல வெற்றிப்படங்களை இயக்கியவர் தான் சுந்தர் சி. மணிவண்ணனிடம் உதவி இயக்குனராக இருந்து பின்னர் முறைமாமன் என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகம் ஆனார். 1995ம் ஆண்டு வெளியான இந்த படத்தில் குஷ்பூ நடித்திருப்பார். பின்னர் இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். பின்னர் சூப்பர் ஸ்டாரை வைத்து அண்ணாமலை படத்தை இயக்கினார். பின்னர் உலகநாயகன் கமலை வைத்து அன்பே சிவம் படத்தை எடுத்தார். வின்னர், கலகலப்பு, அரண்மனை 1, 2 மற்றும் 3 போன்ற படங்களை எடுத்தார்.

இவர் இயக்கிய அனைத்துமே வெற்றிப்படங்கள் தான். பின்னர் தலைநகரம் படத்தில் ஹீரோவாக நடித்தார். இந்த படத்தின் இரண்டாம் பாகத்தில் தற்போது நடித்துக் கொண்டிருக்கிறார். வடிவேலுவுடன் இணைந்து இந்த படத்தில் இவர் செய்த காமெடிகள் இன்றளவும் மறக்க முடியாதவை. மேலும் ஜெய், ஜீவா, அம்ரிதா ஐயர், டிடி, யோகிபாபு, கிங்ஸ்லி வைத்து ஒரு நகைச்சுவை படத்தை இயக்கி வருகிறார். இந்த நிலையில் தனது பேட்டி ஒன்றில் சில இயக்குனர்களை வறுத்து எடுத்துள்ளார். Youtube Video Code Embed Credits: Behindwoods
சிலர் ஒரு படங்களை எடுத்துவிட்டு ஓவராக ஆடுகிறார்கள் என்றும், பாலசந்தர், பாரதிராஜா போன்றவர்கள் எவ்வளவு பெரிய மேதைகள் அவர்களே சும்மா இருக்கும்போது நீங்க ஏன்டா ஓவரா ஆடுறீங்கன்னு கேக்க தோணுவதாக கூறினார். அந்த வீடியோவை நீங்களும் காண.. Watch the below video
விளம்பரம்
விளம்பரம்