பல ஆண்டு காலமாக தமிழ் சினிமாவின் ஹாட் காதல் ஜோடிகளாக வலம் வந்துக் கொண்டிருப்பவர்கள் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன். இவர்களின் திருமணம் எப்போது? என்பது தான் ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்து இருந்த ஒரு விஷயம். மேலும், நெற்றிக்கண் படத்தின் ப்ரோமஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நயன்தாரா, தனக்கும் இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும் நிச்சயதார்த்தம் முடிந்தாக கூறியிருந்தார்.
மேலும், தாங்கள் மிகவும் private ஆன நபர்கள் என்பதால் நிச்சயதார்த்தம் பற்றி பெரிதாக வெளியில் சொல்லவில்லை. ஆனால், நிச்சயம் திருமணத்தை அனைவருக்கும் சொல்லிவிட்டு தான் பண்ணுவோம் என்று சொல்லி இருந்தார். அதன் பின் இருவரும் காதல் பறவைகளாக சினிமா உலகிலும், வெளி உலகிலும் வலம் வந்து கொண்டிருந்தாலும் இருவரும் படங்களில் பிசியாக பணி புரிந்து வருகிறார்கள். சமீபத்தில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளிவந்து இருந்த காத்துவாக்குல ரெண்டு காதல் படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது.
இந்த படம் முழுக்க முழுக்க ரொமாண்டிக் காமெடி திரைப்படமாக உருவாகி இருந்தது. இதனை தொடர்ந்து விக்னேஷ் சிவன், அஜித்தின் ‘ஏகே 62’ படத்தை இயக்குகிறார். சமீபத்தில் தான் இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகி இருந்தது. அதேபோல் நயன் அவர்கள் O2, காட்பாதர், கனெக்ட், ஜவான், திரில்லர் படம் போன்ற பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். இது ஒரு பக்கம் இருக்க, அடிக்கடி விக்னேஷ் சிவனும், நயன்தாராவும் திருப்பதி கோவிலுக்கு சென்று தரிசனம் செய்வது வழக்கம். அந்த புகைப்படம் எல்லாம் சோசியல் மீடியாவில் வைரலாகி இருக்கிறது.
இப்படி ஒரு நிலையில் அனைவரும் எதிர்பார்த்த இவர்களுடைய திருமணம் ஜூன் 9ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதற்காக இருவரும் திருச்சியில் உள்ள தங்களின் குலதெய்வ கோவிலுக்கு சென்று இருந்தார்கள். அதோடு நயன்தாரா, விக்னேஷ் சிவன் குலதெய்வ கோவிலில் பொங்கல் வைத்து வழிபட்ட வீடியோ மற்றும் புகைப்படங்கள் வைரலாகி இருந்தது. மேலும், பலரும் எதிர்பார்த்தது போல திருப்பதியில் தான் இவர்கள் திருமணம் நடத்துவதாக முடிவு செய்திருந்தார்கள். ஆனால், 150 விருந்தினர்கள் வரை கலந்து கொள்வதற்கு திருப்பதி நிர்வாகத்தில் அனுமதி கிடைக்கவில்லை.
இதனால் நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் இல்லாமல் திருமணம் நடத்த வேண்டாம் என்று இருவருமே இணைந்து முடிவெடுத்து இருக்கின்றன. ஆகவே, இவர்களின் திருமணம் சென்னை மகாபலிபுரத்தில் உள்ள ஒரு ரிசார்ட்டில் ஜூன் 9ஆம் தேதி கோலாகலமாக நடக்க இருக்கிறது. இவர்களின் திருமணத்தில் தென்னிந்திய சினிமா துறையின் மிக பிரபலமான நட்சத்திரங்கள் பலரும் கலந்து கொள்கிறார்கள். தற்போது இவர்கள் திருமணத்திற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. மகாபலிபுரத்தில் உள்ள மகாப்ஸ் ஃபைவ் ஸ்டார் ஓட்டலில் ஜுன் 9ம் தேதி அதிகாலை 5.30 மணி முதல் 7 மணி வரையிலான முகூர்த்தத்தில் நயன்தாரா – விக்னேஷ் சிவன் திருமணம் நடக்கிறது.


முழுக்க முழுக்க பாரம்பரியமான முறைப்படியும், இந்து முறைப்படியும் இவர்களுடைய திருமணம் நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் சென்று கொண்டு இருக்கிறது. மேலும், விக்னேஷ் சிவன்- நயன்தாரா திருமணத்தை படமாக எடுத்து அதை நெட்ப்ளிக்ஸ் இணையதளத்தில் ஒளிபரப்பு செய்ய இருப்பதாக ஏற்கனவே தகவல் வெளியாகி இருந்தது. இந்த நிலையில் இந்த திருமண வீடியோவை இயக்கப்போகும் இயக்குனர் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அது வேற யாரும் இல்லைங்க, கௌதம் மேனன் இயக்கத்தில் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாராவின் திருமண வீடியோவை நெட்ப்ளிக்ஸ் இணையதளத்தில் ஒளிபரப்ப இருக்கிறார்கள்.