தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் பிரபு சாலமன். 1999ஆம் ஆண்டு கண்ணோடு காண்பதெல்லாம் என்ற படத்தினை இயக்கி சினிமாவுக்குள் என்ட்ரி கொடுத்து இருந்தார். இப்படத்தை தொடர்ந்து இவர் பல படங்கள் இயக்கி இருந்தாலும், இவர் இயக்கிய மைனா திரைப்படம் தமிழ் சினிமாவையே திரும்பி பார்க்க வைத்தது. இப்படம் மிகப்பெரிய ஹிட் படமாக பிரபு சாலமனுக்கு அமைந்தது.

இப்படத்தை தொடர்ந்து இவர் இயக்கிய கும்கி படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. இப்படங்களின் வெற்றி தமிழ் சினிமாவில் பிரபு சாலமனை முன்னணி இயக்குனராக உருமாற்றியது. இவர் புது முகங்களை வைத்து படம் இயக்கி அவர்களை அறிமுகப்படுத்துவது வழக்கமாக வைத்து உள்ளார். இவர் நடிப்பில் அறிமுகமாகிய பல நட்சத்திரங்கள் சினிமாவில் உள்ளனர்.
இவர் அடுத்ததாக நடிகர் விஜயகுமார் பேரன் விஜய் ஸ்ரீ ஹரியை வைத்து மாம்பா என்ற படத்தை எடுத்து வருகிறார். தற்போது குடும்பத்துடன் இவர் விடுமுறைக்கு வெளிநாடு சென்றுள்ளார். அங்கு எடுத்த இவரது புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.