படம் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது உண்மை தான்…ஆனா!!சூர்யா -பாலா படம் குறித்த உண்மை நிலவரத்தை தெரிவித்துள்ள படக்குழு

நந்தா, பிதாமகன் என்ற இரு வெற்றிப்படங்களை நடிகர் சூர்யாவிற்கு கொடுத்தவர் இயக்குனர் பாலா. உண்மையில் நடிகர் சூர்யாவின் திரையுலக பயணத்தில் இந்த இரண்டு படங்களும் மிக முக்கியமானவை ஆகும். அண்மையில் 18 ஆண்டுகளுக்கு இந்த கூட்டணி மறுபடியும் இணைய உள்ளது என அதிகாரபூர்வமாக அறிவிப்புகள் வெளியாகின.

நடிகர் சூர்யா இயக்குனர் பாலாவும் இணையும் இந்த படத்தில்  நாயகியாக நடிக்க தெலுங்கு நடிகை கீர்த்தி ஷெட்டி ஒப்பந்தமாகினார். இசைமைப்பாளர் ஜி.வி. பிரகாஷும் ஒப்பந்தம் ஆனார். படப்பிடிப்பு சில வாரங்கள் முன்பு துவங்கி கன்னியாகுமரியில் நடைபெற்று முடிந்தது.

விளம்பரம்

படம் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது உண்மை தான்...ஆனா!!சூர்யா -பாலா படம் குறித்த உண்மை நிலவரத்தை தெரிவித்துள்ள படக்குழு 1

ஆனால் சில நாட்களாக நடிகர் சூர்யாவிற்கு இயக்குனர் பாலாவிற்கு படப்பிடின் போது சில மனகசப்புகள் உருவாகியது, இதனால் நடிகர் சூர்யா யாரிடமும் சொல்லாமல் படப்பிடிப்பிலிருந்து சென்னை வந்துவிட்டார் எனவும், படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது எனவும் செய்திகள் வெளியாகின.

விளம்பரம்

இருதரப்பும் இது குறித்து எந்த விளக்கமும் அளிக்காத நிலையில், படம் கைவிடப்பட்டது, படம் நிறுத்தப்பட்டுவிட்டது எனவும் பல்வேறாக செய்திகள் வெளியாகி கொண்டே இருந்தன. இந்நிலையில் படத்தின் தயாரிப்பு நிர்வாகி படம் குறித்து உண்மை நிலவரத்தை இப்பொது கூறியுள்ளார்.

தொடர்புடையவை  நடிகர் விஜயகுமார் வீட்டு வரலக்ஷ்மி விரத பூஜை..! மகள்களுடன் பூஜை செய்த நடிகர் விஜயகுமார்..!

அதாவது ஒவ்வொரு காட்சியையும் பார்த்து பார்த்து எடுக்கும் இயக்குனர் பாலா முதல்க்கட்ட  படப்பிடிப்பில் சில காட்சிகள் மட்டுமே படமாக்கப்பட்டுள்ளதாகவும், சில காட்சிகளை இயக்குனர் மீண்டும் மீண்டும் சரியாக பார்த்து பார்த்து எடுத்து வருவதாகவும் கூறியுள்ளார்.

விளம்பரம்

படம் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது உண்மை தான்...ஆனா!!சூர்யா -பாலா படம் குறித்த உண்மை நிலவரத்தை தெரிவித்துள்ள படக்குழு 3

மேலும் பாலா மீண்டும் சில காட்சிகளை மாற்றி எழுதி படப்பிடிப்பை மீண்டும் தொடங்க உள்ளதாகவும், படப்பிடிப்பு நிறுத்தப்படவில்லை, சில நாட்களில் மீண்டும் துவங்கும் என புரளிகளை நமத்து வேண்டாம் எனவும் கூறியுள்ளார்.

விளம்பரம்

இயக்குனர் பாலா உண்மையில் தன்னிடம் நடிக்கும் நடிகர்களை பெரிதும் துன்புறுத்தி படத்தை முடிப்பார் என்பது அனைவரும் அறிந்ததே. அதே போல் தான் இந்த படத்திற்கும் செய்ய, சூர்யா கோபம் அடைந்ததாக கூறப்பட்டது. இப்பொது தயாரிப்பு நிறுவனமே இவ்வாறு கூறிய நிலையில், ரசிகர்கள் பெரு மூச்சு விட்டுள்ளனர். இந்த படம் சிறப்பாக முடிவடைந்து வெளியாகி நல்ல வெற்றியை பெற வேண்டும் என சூர்யாவின் ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்து உள்ளனர்.

விளம்பரம்

Video Courtesy – CineUlagam

விளம்பரம்

Leave a Comment