நடிகர் விஜயகுமார் வீட்டு வரலக்ஷ்மி விரத பூஜை..! மகள்களுடன் பூஜை செய்த நடிகர் விஜயகுமார்..!

தமிழ் சினிமாவில் பழம்பெரும் நடிகர் விஜயகுமார். பலவெற்றி படங்களை தமிழ் சினிமாவுக்கு கொடுத்து அசத்தி உள்ளார். அன்று முதல் இன்றுவரை பல முன்னணி நடிகர்களுடனும் நடித்த ஒரே நடிகர் என்றால் அது விஜயகுமார் தான். நடிகை மஞ்சுளாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார் விஜயகுமார். இவரின் மகன் மற்றும் மகள்கள் என அனைவரும் சினிமா துறையில் தான் உள்ளனர்.

நடிகர் விஜயகுமார் வீட்டு வரலக்ஷ்மி விரத பூஜை..! மகள்களுடன் பூஜை செய்த நடிகர் விஜயகுமார்..! 1

விளம்பரம்

அந்த அளவுக்கு சினிமாவின் மீது அதிக காதலை கொண்ட குடும்பமாக இருக்கிறார்கள் விஜயகுமார் குடும்பத்தினர். தற்போது மகன் மகள் மருமகன் என தொடங்கி தனது பேரனையும் நாயகனாக களம் இறக்க உள்ளார். இவரின் பேரன் விஜய ஸ்ரீ ஹரி , பிரபு சாலமன் இயக்கத்தில் மாம்பா படத்தில் நாயகனாக நடிக்க உள்ளார். இந்த படத்தின் போஸ்டர் அண்மையில் வெளியாகி இருந்தது.

நடிகர் விஜயகுமார் வீட்டு வரலக்ஷ்மி விரத பூஜை..! மகள்களுடன் பூஜை செய்த நடிகர் விஜயகுமார்..! 3

விளம்பரம்

இந்நிலையில் இன்று வரலக்ஷ்மி விரத பூஜையை மகள்கள் மற்றும் குடும்பத்துடன் கொண்டாடி உள்ளார். அம்மனுக்கு வீட்டில் அலங்காரம் செய்து பூஜை செய்து உள்ளார் விஜயகுமார் . இந்த புகைப்படங்களை அவரின் மகள் அனிதா விஜயகுமார் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு உள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

தொடர்புடையவை  தர்பார் படத்தை பற்றி அட்டகாசமான அப்டேட்டை வெளியிட்ட அனிருத்!!

நடிகர் விஜயகுமார் வீட்டு வரலக்ஷ்மி விரத பூஜை..! மகள்களுடன் பூஜை செய்த நடிகர் விஜயகுமார்..! 5

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment