விஜய் தேவார கொண்டா, சமந்தா ஆகியோர் நடிப்பில் விரைவில் வெளியாக இருக்கும் குஷி படத்திலிருந்து அடுத்த சிங்கிள் பாடலான “ஆராத்யா” என்கிற பாடல் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்று இருக்கிறது. மெலடியான குரலில் இந்த பாடல் வெளியாகி இருக்கிறது. மேலும் விஜய் தேவார கொண்டா, சமந்தா ஆகிய இருவரின் ரொமான்ஸ்சும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது. தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் விஜய் தேவார கொண்டா. இவரின் உடல் கட்டமைப்புக்கும், அழகிய தோற்றத்திற்க்காகவும் பல ரசிகர்கள் இருந்து வருகின்றனர். இந்த நிலையில் தற்போது விஜய் தேவார கொண்டாவும் சமந்தாவும் இணைந்து முதல் படத்தில் நடித்திருக்கின்றனர். குஷி என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தின் இரண்டாவது சிங்கள் பாடல் ஆராத்யா தற்போது வெளியாகி இருக்கிறது. ரொமான்டிக் கலந்த மெலடி பாடலாக இந்த பாடல் வெளியாகி இருக்கிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நீண்ட இடைவெளிக்கு பின்னர் காதல் கலந்த ஒரு படத்தில் கமிட்டாகி இருக்கிறார் சமந்தா. இந்த பாடலை சித் ஸ்ரீராம் மற்றும் சின்மயி இருவரும் இணைந்து பாடி இருக்கின்றனர். திருமணமான கணவன் மனைவிக்கு இடையே நடக்கும் ரொமான்ஸ் காட்சிகளை மையமாக வைத்து இந்த பாடல் எடுக்கப்பட்டிருக்கிறது. விஜய் தேவார கொண்டாவிற்கும் சமந்தாவிற்கும் கெமிஸ்ட்ரி நன்றாக ஒர்க் அவுட் ஆகி இருக்கிறது. இந்த படத்தை இயக்குனர் சிவ நிர்வானா இயக்கியிருக்கிறார். மதன் கார்க்கி தமிழ் பாடல்களை எழுதி இருக்கிறார். இந்த படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்து இருக்கிறது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி மலையாளம், கன்னடம் என்று ஐந்து மொழிகளில் பான் இந்தியா படமாக இந்த படம் உருவாகி இருக்கிறது. வருகிற செப்டம்பர் ஒன்றாம் தேதி இந்தியா முழுவதும் உள்ள திரையரங்குகளில் இந்த படம் வெளியாக இருக்கிறது.

இந்த படத்தில் விஜய் தேவாரக் கொண்டா, சமந்தா, சரண்யா பிரதீப் ,வெண்ணிலா கிஷோர் ,முரளி ஷர்மா, ஜெயராம் சச்சின் உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர், இந்தப் படத்திற்கு ஹாசிம் அப்துல் வஹாப் இசையமைத்திருக்கிறார். ராஜூ சுந்தரம், பிருந்தா மாஸ்டர் ஆகியோர் இந்த படத்திற்கு கோரியோகிராபர்களாக பணியாற்றி இருக்கின்றனர். தற்போது வெளியாகியிருக்கும் அந்த பாடலை நீங்களும் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!
Youtube Video Embed Code Credits: Saregama Tamil