விஷால் மற்றும் எஸ் ஜே சூர்யா ஆகியோர் நடிப்பில் விரைவில் திரையில் வெளியாக இருக்கும் திரைப்படம் தான் மார்க் ஆண்டனி. தற்போது இந்த படத்தின் முதல் சிங்கிள் பாடல் ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. ஜிவி பிரகாஷின் இசையில் பிரபல நடிகர் டி ராஜேந்தர் குரலில் தற்போது அந்த பாடலின் ப்ரோமோவை படக் குழுவினர் வெளியிட்டு இருக்கின்றனர். தமிழ் திரையுலகில் புரட்சி தளபதியாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் விஷால் இவர் தொடர்ந்து பல நல்ல படங்களில் நடித்து பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்திருக்கிறார். இவரது நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் லத்தி எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியை பெறவில்லை, அடுத்ததாக விஷால் இயக்குனராக அவதாரம் எடுத்து துப்பறிவாளன் 2 படத்தை இயக்கி வருகிறார். தொடர்ந்து தனது 34 ஆவது படத்தையும் விஷாலே இயக்க இருக்கிறார் என்று தகவல் வெளியாகி இருக்கிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தற்போது விஷால் எஸ் ஜே சூர்யா ஆகியோர் நடிப்பில் விரைவில் வெளியாக இருக்கும் திரைப்படம் தான் மார்க் ஆண்டனி. இந்த திரைப்படத்தை ஆத்விக் ரவிச்சந்திரன் இயக்க, ரிது வர்மா, இயக்குனர் செல்வராகவன், நிழல்கள் ரவி, ஒய் ஜி மகேந்திரன், ரெட்டிங் கிங்ஸ்லி, அபிநயா உள்ளிட்ட பலர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். இந்த படத்தை மினி ஸ்டுடியோ சார்பில் வினோத்குமார் தயாரித்திருக்கிறார். அபிநந்தன் ராமானுஜம் ஒளிப்பதிவு செய்ய விஜய் வேலு குட்டி படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டு இருக்கிறார். இந்த படத்திற்கு இசையமைப்பாளராக ஜிவி பிரகாஷ் பணியாற்றி இருக்கிறார். டைம் டிராவல் கான்செப்டை மையமாகக் கொண்டு வித்தியாசமான கேங்ஸ்டர் படமாக இந்த படம் உருவாகி இருப்பதாக தெரிகிறது. சமீபத்தில் இந்த படத்திலிருந்து வெளியான டீசர் ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. படத்தின் இறுதிக் கட்டப் பணிகள் தற்போது நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

டீசர் வெளிவந்து சில மாதங்கள் ஆன நிலையில், படத்திலிருந்து எந்த அப்டேட்டும் வெளியாகாமல் இருந்து வந்தது. இதனால் ரசிகர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வந்த நிலையில்,தற்போது படத்தின் முதல் பாடலை டி ஆர் பாடியிருக்கிறார். “அதிரனும் டா” என்று தொடங்கும் அந்தப் பாடலை டி.ஆர். பாட ஜிவி பிரகாஷ், ஆத்விக் ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் அமர்ந்து கேட்டுக் கொண்டிருக்கின்றனர். அப்படியான ப்ரோமோவை படக் குழுவினர் வெளியிட்டு இருக்கின்றனர். வருகிற ஜூலை 15ஆம் தேதி இந்த படத்தின் முதல் பாடல் வீடியோ வெளியாகும் என்று படக்குழு அறிவித்திருக்கிறது. தற்போது வெளியாகி இருக்கும் அந்த ப்ரோமோவை நீங்களும் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!
YouTube Video Embed Code Credits: Think Music India