Categories: சினிமா

ஷங்கர் மூத்த மகள் ஐஸ்வர்யாவின் திருமண வரவேற்பு.! வந்து குவிந்த இந்திய திரைப் பிரபலங்கள்.!

வெளியிட்டது

தமிழ் திரையுலகில் பிரம்மாண்ட இயக்குனராக வலம் வந்து கொண்டிருக்கும் இயக்குனர் சங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யாவின் திருமண வரவேற்பு சென்னையில் மிக பிரம்மாண்டமாக நடந்து வருகிறது.

ஷங்கர் மூத்த மகள் ஐஸ்வர்யாவின் திருமண வரவேற்பு.! வந்து குவிந்த இந்திய திரைப் பிரபலங்கள்.! 1

இதில் இந்திய திரையுலகின் பிரபலங்கள் பலரும் நேரில் கலந்து கொண்டு வாழ்த்தி இருக்கின்றனர்.

தற்போது ‘இந்தியன் 2’ படப்பிடிப்பில் பிஸியாக இருந்து வருகிறார் இயக்குனர் சங்கர்.

இவரது மூத்த மகள் ஐஸ்வர்யாவுக்கு ஏற்கனவே திருமணம் ஆகி இருந்தது.

ஆனால் முதல் கணவர் போக்சோ சட்டத்தில் கைதானதால் அவரை விவாகரத்து செய்துவிட்டு தற்போது இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டிருக்கிறார் ஐஸ்வர்யா.

இந்த திருமணத்தை சங்கர் பிரம்மாண்டமான முறையில் நடத்தியிருக்கிறார்.

முதலமைச்சர் மு.க ஸ்டாலின், கமலஹாசன், ரஜினிகாந்த், சியான் விக்ரம், சூர்யா, அட்லி உள்ளிட்ட பலரும் நேரில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி இருந்தனர்.

இந்த நிலையில் இன்று சென்னையில் இவர்களது திருமண வரவேற்பு நடைபெற்று வருகிறது.

இதில் இந்திய திரைப்பிரபலங்கள் பலரும் நேரில் வந்து மணமக்களை வாழ்த்தியுள்ளனர்.

மோகன்லால், போனி கபூர், ஏ.ஆர்.ரஹ்மான், லோகேஷ் கனகராஜ், விஜய் சேதுபதி, ஜெயம் ரவி, அனிருத், சிவகார்த்திகேயன், சிரஞ்சீவி, ராம்சரண் நெல்சன் திலீப்குமார், காஜல் அகர்வால் போன்ற பலர் வந்து குவிந்துள்ளனர்.

அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகியிருக்கிறது.

பலரும் புதுமண தம்பதிகளுக்கு தங்களுடைய வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்