விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலின் இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. அதில் விஜயாவும் ரோகிணியும் சதித்திட்டம் தீட்டி மீனாவின் பூக்கடையை அதிகாரிகளை வரவைத்து காலி செய்து விட்டனர். இதனால் அவர்களுக்கு தக்க பதிலடி கொடுக்கும் வகையில் முத்து ஒரு புதிய திட்டம் ஒன்றை தீட்டி இருக்கிறார். இதைப் பார்த்த ரோகிணியும் விஜயாவும் வாயை பிளந்து கொண்டு நின்று கொண்டிருக்கின்றனர். அந்த ப்ரோமோ தற்போது வெளியாகியிருக்கிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

வீட்டு வாசலில் மீனா பூக்கடை வைத்திருப்பது அவரது மாமியார் விஜயாவுக்கு சிறிதும் பிடிக்கவில்லை. எனவே அந்த கடையை எப்படியாவது காலி செய்து வைத்துவிட வேண்டும் என்று திட்டம் தீட்டி அதிகாரிகளை வரவைத்து கடையை காலி செய்து விடுகிறார். இதனால் மணமுடைந்த மீனாவிற்கு ஆறுதலாக தற்போது முத்து புது திட்டம் ஒன்றை தீட்டுகிறார். அவருக்காக ஸ்கூட்டி ஒன்றை வாங்கி வந்து இனி இதில் பூவை வைத்து நீ வியாபாரம் செய்யலாம் உன்னை யாரும் எதுவும் கேட்க மாட்டார்கள் என முத்து கூறுகிறார்.

இதனால் நோஸ் கட்டாக உணரும் விஜயாவும் ரோகிணியும் அப்படியே உறைந்து போய் நின்று கொண்டிருக்கின்றனர். அந்த ப்ரோமோவை நீங்களும் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!
YouTube Video Embed Code Credits: Vijay Television