Categories: சினிமா

Mariselvaraj உங்களை பாராட்டியே ஆகணும்..! புகழ்ந்து தள்ளிய இயக்குனர் Sudha கொங்கரா..!

வெளியிட்டது

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனர் மாரி செல்வராஜ். இவரின் இயக்கத்திற்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமே உள்ளது. பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் இயக்குனராக சினிமாவுக்குள் அடியெடுத்து வைத்த இவர் தற்போது முன்னணி இயக்குனராக உருவெடுத்துள்ளார். இப்படத்தை தொடர்ந்து கர்ணன் , மாமன்னன் என வரிசையாக ஹிட் படங்களை கொடுத்து உள்ளார்.

Mariselvaraj உங்களை பாராட்டியே ஆகணும்..! புகழ்ந்து தள்ளிய இயக்குனர் Sudha கொங்கரா..! 1

தற்போது இவர் துருவ் விக்ரமை வைத்து பைசன் படத்தினை இயக்கி வருகிறார். இவருக்கு அடுத்ததாக வாழை படம் வெளியாக உள்ளது . இப்படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் உருவாகி இருக்கிறது. இப்படத்தில் இவருடன் நிகிலா விமல் , கலையரசன், திவ்யா துரைசாமி ஆகியோர் நடித்து உள்ளனர் . இப்படம் கடந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.

ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்ற இந்த படத்தை பார்த்த இயக்குனர் சுதா கொங்காரா, இயக்குனர் மாரிசெல்வராஜை பாராட்டி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், இதுபோன்ற அற்புதமான படைப்பை தைரியமாக கொடுத்த இயக்குனர் மாரிசெல்வராஜுக்கு எனது பாராட்டுக்கள். தனது வாழ்க்கையில் நடந்த துயர சம்பவத்தை காட்ட நிச்சயம் தைரியம் வேண்டும் என கூறி அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து உள்ளார்.

 

வெளியிட்டது

புதிய செய்திகள்