எங்க அப்பா காணாம போய்ட்டாரு..கண்டுபுடிச்சு தாங்க.! கண்கலங்கிய கூல் சுரேஷ்

நடிகர் கூல் சுரேஷின் தந்தை காணாமல் போய்விட்டதாகவும், அவரை கண்டுபிடித்து தருமாறும் கூல் சுரேஷ் கண்ணீர் மல்க வேண்டுகோள் விடுத்திருக்கிறார். திரைத்துறையில் நெகட்டிவ் பப்ளிசிட்டி மூலமாக பலருக்கும் பரிச்சயமான ஒரு நபர்தான் கூல் சுரேஷ். இவர் ஆரம்பத்தில் டி ராஜேந்திரன் அவர்களின் பேட்டியின் போது ஏதாவது காமெடி செய்து அதன் மூலமாக பிரபலமானார். பின்னர் படங்கள் வெளியாகும் போது வெந்து தணிந்தது காடு அந்த படத்திற்கு வணக்கத்தை போடு என்று கூறி தியேட்டர் வாசல் முன்பு என்று அலப்பறை செய்வார். எந்த படம் வெளியானாலும் முதல் ஆளாக போய் படம் பார்த்துவிட்டு அந்த படத்தைப் பற்றி கருத்து சொல்வது தான் கூல் சுரேஷின் வழக்கம். தனது நண்பரான சிம்புவின் வெந்து தணிந்தது காடு படத்திற்காக அவர் கடந்த இரண்டு வருடங்களாக இலவசமாக பிரமோஷன் செய்து வந்தார்.

எங்க அப்பா காணாம போய்ட்டாரு..கண்டுபுடிச்சு தாங்க.! கண்கலங்கிய கூல் சுரேஷ் 1

விளம்பரம்

 

படம் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் அவர்கள் கூல் சுரேசை சந்தித்து அவருக்கு ஐபோன் ஒன்றை பரிசளித்திருந்தார். மேலும் கூல் சுரேஷின் குழந்தைகளின் படிப்பு செலவையும் தான் பார்த்துக் கொள்வதாக கூறியிருந்தார். தொடர்ந்து ஏதாவது பரபரப்பாக செய்து வரும் கூல் சுரேஷ் பொன்னியின் செல்வன் படத்திற்கு வரும்பொழுது விக்ரம் பயன்படுத்திய அதே குதிரையில் வந்தார். அப்போது பேசிய அவர் இந்த குதிரைக்காக தன் செயினை அடமானம் வைத்து அதில் வந்த காசில் வாடகைக்கு எடுத்து வந்ததாக கூறினார். இதுபோன்று தொடர்ந்து காமெடி செய்து வரும் கூல் சுரேஷ், தற்போது சோகமான செய்தி ஒன்றை பகிர்ந்திருக்கிறார். அதாவது அவரது தந்தை இரண்டு நாட்களுக்கு முன்பு காணாமல் போயிருக்கிறார்.

விளம்பரம்
தொடர்புடையவை  66 வயதிலும் ஆக்ஷனில் பின்னி எடுத்துள்ள மைக் மோகன்.! ஹரா படத்தின் first சிங்கிள் வெளியானது

எங்க அப்பா காணாம போய்ட்டாரு..கண்டுபுடிச்சு தாங்க.! கண்கலங்கிய கூல் சுரேஷ் 3

கடந்த 29ஆம் தேதி மஞ்சள் நிற சட்டையுடன், நீல நிற லுங்கி அணிந்து கொண்டு கையில் குடையுடன் காலை 10 மணியளவில் நடை பயிற்சிக்காக வெளியே சென்ற தனது தந்தை காணவில்லை என்று கூறியிருக்கிறார். அவருக்கு வயது 84. அவர் பெயர் முத்தையா. வயது முதிர்வு காரணமாக அவருக்கு காது சரியாக கேட்காது என்றும் அவர் கூறியிருக்கிறார். அவர் சென்று இரண்டு நாட்கள் ஆகியும் வீடு திரும்பாததால் கூல் சுரேஷ் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில் தனது தந்தையை யாராவது கண்டுபிடித்தால் இந்த நம்பருக்கு அல்லது காவல்துறையின் தொலைபேசி நம்பருக்கு தொடர்பு கொள்ளுங்கள் என்று பேசி இருக்கும் காணொளியை பலரும் பகிர்ந்து வருகின்றனர்.

விளம்பரம்

Youtube Video Code Embed Credits: Trend Mamz

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment