ஜோ இல்லைன்னா நான் இல்ல.. மனைவி பற்றி வெட்கப்பட்டு பேசிய சூர்யா.!

திரைத்துறையில் கொடி கட்டி பறந்து வரும் ஜோடிகளில் ஒருவர்தான் சூர்யா மற்றும் ஜோதிகா. இந்த இரண்டு ஜோடிகளையும் பிடிக்காத நபர்கள் இல்லை என்றே கூற வேண்டும். அந்த அளவிற்கு தமிழ் மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்த இவர்களுக்கு, மேலும் ஒரு மணி மகுடமாய் நேற்று தேசிய விருது பெற்றிருந்தனர். அந்த புகைப்படங்களை இருவரும் தங்களது சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்திருந்தனர். நாட்டின் 68வது திரைப்பட தேசிய விருது வழங்கும் விழாவிற்காக ஜோதிகா, சூர்யா அவர்களது பிள்ளைகள் என அனைவரும் நேற்று டெல்லி சென்றிருந்தனர். நேற்று மாலை நடந்த திரைப்பட விழாவில் அவர்களுக்கு தேசிய விருது வழங்கப்பட்டது. சூரரைப் போன்று படத்திற்காக மொத்தம் ஐந்து தேசிய விருதுகள் வழங்கப்பட்டது. கீழே உள்ள வீடியோவைப் பார்க்கவும்.

ஜோ இல்லைன்னா நான் இல்ல.. மனைவி பற்றி வெட்கப்பட்டு பேசிய சூர்யா.! 1

விளம்பரம்

சிறந்த நடிகருக்கான விருது சூர்யாவுக்கு வழங்கப்பட்டது. அப்போது கீழிருந்த ஜோதிகா, தனது மொபைல் போனில் சூர்யாவை படம் பிடித்தார். அதேபோல் தயாரிப்பு நிறுவனமான 2d என்டர்டெயின்மெண்ட் சார்பில் ஜோதிகாவிற்கு விருது வழங்கப்பட்ட போது, கீழே அமர்ந்திருந்த சூர்யா அதை தனது மொபைலில் ஜோவை போட்டோ எடுத்திருந்தார். இது போன்ற பல கேண்டிட் புகைப்படங்கள் கிடைத்திருந்தன. அந்த அழகான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி இருந்தது. மேலும் விருது வாங்கிவிட்டு வெளியே வந்த போது பேசிய சூர்யா, ஜோவின் ஒளி என் மீது எப்பொழுதும் வீசிக் கொண்டே இருக்கும் என்று பேசினார்.

தொடர்புடையவை  இளையராஜாவை மிமிகிரி செய்து பாடிய மிஷ்கின்.! மனுஷன் அப்படியே பாடுறாரே.!

ஜோ இல்லைன்னா நான் இல்ல.. மனைவி பற்றி வெட்கப்பட்டு பேசிய சூர்யா.! 3

விளம்பரம்

தேசிய விருது மெடலை தனது மகன் மற்றும் மகள் இருவரின் கழுத்திலும் போட்டு அழகான புகைப்படத்தை எடுத்து இருந்தனர். பிறகு தனது தந்தை சிவக்குமார் தனது தாயார் உடன் இருக்கும் புகைப்படங்களை தற்போது சூர்யா பதிவிட்டு உள்ளார். மேலும் தான் படங்களுக்கு சரியான கதையை தேர்வு செய்ய முடியாமல் கஷ்டப்படும் பொழுதெல்லாம் ஜோதான் தனக்கு உதவியாக இருந்து கதைகளை கேட்டு அந்த படங்களை தேர்வு செய்தார். என்னுடைய வெற்றிக்கு ஜோவும் ஒரு பெரிய காரணம் என்று தனது மனைவி பற்றி பெருமையாக பேசினார். அந்த வீடியோவை நீங்களும் காண.. Watch the below video..

விளம்பரம்

Youtube Code Embed Credits: Polimer

விளம்பரம்

Leave a Comment