என் கணவர் இப்ப திருப்பி வந்தா ரொம்ப சந்தோஷ படுவேன்.. பாவனி சொன்ன அதிர்ச்சி பதில்

பாவனி திடீரென இறந்து போன தன் கணவர் மீண்டு வந்தால் நான் மிகவும் சந்தோசமாக இருப்பேன் என பேசி இருக்கும் காணொலி தற்போது இணையத்தில் வைரலாகி இருக்கிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பான ரெட்டைவால் குருவி என்ற சீரியலின் மூலமாக அறிமுகமானவர் நடிகை பாவனி. பின்னர் இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான சின்னத்தம்பி என்கிற சீரியலில் நடிகர் பிரஜனுடன் இணைந்து நடித்தார். அதற்குப்பிறகு வாய்ப்புகள் குறைந்து விட்டதால், அவருக்கு பிக்பாஸில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. பிக்பாஸ் சீசன் 5 இன் போட்டியாளராக கலந்து கொண்டார். பாவனியின் தனிப்பட்ட வாழ்க்கையை பொறுத்தவரை அவர் தெலுங்கு சின்னத்திரை நடிகர் ஒருவரை திருமணம் செய்து கொண்டார். ஆனால் திருமணம் ஆன சில மாதங்களிலேயே அவரது கணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்.

என் கணவர் இப்ப திருப்பி வந்தா ரொம்ப சந்தோஷ படுவேன்.. பாவனி சொன்ன அதிர்ச்சி பதில் 1

விளம்பரம்

பிக்பாஸில் இருந்த போது ஒவ்வொருவரும் தனக்கு நடந்த கஷ்டங்களை கூறுவது வழக்கம். அப்படி பாவனி கூறும் போது தனக்கும் தனது கணவருக்கும் ஒரு சிறிய வாக்குவாதம் தான். ஆனால் அவர் ஏன் இப்படி ஒரு முடிவெடுத்தார் என்று தெரியவில்லை. திடீரென அறைக்குச் சென்று தூக்கு மாட்டிக் கொண்டார் என பாவனி கூறியிருந்தார். இதை பார்த்த பலருக்கும் பாவனியின் மீது அனுதாபம் ஏற்பட்டது. அதேபோல் நடன இயக்குனர் அமீருக்கும் அனுதாபம் ஏற்பட்டது. அமீரை பிக்பாஸில் உள்ளே வைல்ட் கார்டு என்ட்ரியாக அனுப்பிய போது, அவர் முதலாக சொன்னது, பாவனியின் கதையை கேட்டு அவர் மீது தமக்கு காதல் வந்துவிட்டதாக கூறினார். அன்று தொடங்கி இன்று வரை பாவனியை தீவிரமாக காதலித்து வருகிறார் அமீர் .இருவரும் சேர்ந்து படங்கள், ஆல்பம் சாங், நடன நிகழ்ச்சிகள் என பங்கேற்று வருகின்றனர்.

தொடர்புடையவை  மெய்யழகன் திரை விமர்சனம்

என் கணவர் இப்ப திருப்பி வந்தா ரொம்ப சந்தோஷ படுவேன்.. பாவனி சொன்ன அதிர்ச்சி பதில் 3

விளம்பரம்

சமீபத்தில் நடந்து முடிந்த பிக்பாஸ் ஜோடிகள் நடன நிகழ்ச்சியில் அவர்கள் பங்கேற்று டைட்டிலையும் வெற்றி பெற்றிருந்தனர். டைட்டிலை வென்ற பிறகு பாவனி தானும் அமீரை காதலிப்பதாக கூறியிருந்தார். இந்த நிலையில் தற்போது பாவனி பேட்டி ஒன்றை அளித்திருக்கிறார். அதில் அவரிடம் சில கேள்விகள் கேட்கப்பட்டுள்ளது. அப்போது உங்கள் வாழ்க்கையில் திரும்பி நடக்க வேண்டும் என்று நினைக்கும் தருணங்கள் என்ன என்ற கேள்வி கேட்கப்பட்டது. அப்போது பேசிய அவர், நான் என் கணவர் திரும்பி வர வேண்டும் என்று நினைக்கிறேன். தற்போது அமீரை காதலிக்கிறேன. எனவே நான் இரண்டு நிலைப்பாட்டில் இருப்பதாக யாரும் எண்ணி விடாதீர்கள்.

என் கணவர் இப்ப திருப்பி வந்தா ரொம்ப சந்தோஷ படுவேன்.. பாவனி சொன்ன அதிர்ச்சி பதில் 5

விளம்பரம்

ஆனால் என் கணவர் திரும்பி வந்தால் அது எனக்கு மகிழ்ச்சி தான். எனக்கு தெரியாமலேயே அவர் என்னை விட்டுப் போய்விட்டார். எனவே அந்த வாழ்க்கை திரும்ப கிடைத்தால் மகிழ்ச்சி அடைவேன் என்று கலங்கி பேசியிருந்தார். அந்த வீடியோவை நீங்களும் காண.. Watch the below video..

விளம்பரம்

Youtube Video Code Embed Credits: Sun Music

விளம்பரம்

Leave a Comment