மெய்யழகன் திரை விமர்சனம்

இயக்குனர் பிரேம் குமார் இயக்கத்தில், நடிகர் கார்த்தி மற்றும் அரவிந்த்சாமி நடிப்பில் இன்று வெளியாகி இருக்கும் படம் மெய்யழகன். இப்படத்தில் கதாநாயகியாக ஸ்ரீ திவ்யா நடித்து உள்ளார். மேலும் ராஜ்கிரண் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து உள்ளார். இப்படத்திற்கு இசையமைப்பாளர் கோவிந்த் வசந்த் இசையமைத்து உள்ளார். இப்படத்தின் விமர்சனத்தை இங்கு காணலாம்

மெய்யழகன் திரை விமர்சனம் 1

விளம்பரம்

படத்தின் கதை

சொந்த ஊரில் உள்ள வீடு கையைவிட்டு சென்றதால் நடிகர் அரவிந்த்சாமி ஊரை காலி செய்து சென்னையில் செட்டில் ஆகிறார். 20ஆண்டுகளுக்கு பிறகு தங்கையின் கல்யாணத்துக்கு அரவிந்த் சாமி மீண்டும் வருகிறார். அங்கு அத்தான் என உரிமையாக சொல்லி வரும் நடிகர் கார்த்தியை சந்திக்கிறார். அன்று இரவே சென்னை திரும்ப உள்ள அரவிந்த்சாமி, பேருந்தை தவறவிடுவதால், கார்த்தி உடன் ஒரு இரவு பயணிக்கிறார்.அந்த இரவில் அவர் வாழ்க்கையில் நடைபெறும் மாற்றங்கள் என்ன என்பது தான் படத்தின் மீதி கதை

விளம்பரம்

மெய்யழகன் திரை விமர்சனம் 3

படத்தின் விமர்சனம்

விளம்பரம்

படத்தின் ஹீரோ அரவிந் சாமி என்றே சொல்லலாம், தனது அருமையான நடிப்பினை படம் முழுவதும் காட்டியுள்ளார். மேலும் நடிகர் கார்த்தி தனது வெகுளித்தனமான பேச்சு மற்றும் நடிப்பால் அரவிந்த்சாமிக்கு ஈடுகொடுத்து நடித்து அசத்தியுள்ளார். மனதளவில் குழந்தை போல நடந்துகொள்ளும் கார்த்தியின் நடிப்பு ரசிகர்களை ரசிக்க வைத்து உள்ளது. தொய்வு என்பதே படத்தில் இல்லாமல் , வசனங்களை வைத்தே படத்தை நகர்த்தி சென்றுள்ள இயக்குனர் பிரேமுக்கு பாராட்டுக்கள். படத்தில் ஒவ்வொரு நடிகர்களும் தங்களுக்கான நடிப்பை சிறப்பாக செய்து உள்ளனர். பின்னணி இசை மற்றும் பாடல் என படத்தில் எடுத்துகொள்ளும் சமூக கருத்துக்களும் பக்க பலமாக அமைந்து இருக்கிறது.
படத்தில் பெரியளவு குறை சொல்வதற்கு என்று ஒன்றும் இல்லை என்பதே மெய்யழகனின் வெற்றி

விளம்பரம்

Leave a Comment