“ஒரு பொண்ணு உண்மையா பேசுனா இப்படி எதிர்ப்பீங்களா”!!எந்த மாதிரியான ஒரு நாட்டுல நாம வாழுறோம்!! சாய் பல்லவிக்கு ஆதரவாக பதிவிட்டுள்ள திவ்யா ஸ்பந்தனா!!

வெளியிட்டது

2015ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான படம் “பிரேமம்”. நிவின் பாலி கதாநாயகனாக  நடிக்க அவருக்கு ஜோடியாக படத்தில் 3 நாயகிகள் நடித்து இருந்தனர். அதில் குறிப்பாக காலேஜ் பருவத்தில் நிவினுக்கு டீச்சராக நடித்த எந்த வித மேக்-ஆப்பும், ஆர்ப்பாட்டமான நடிப்பு இன்றியும் சாதாரணாமாக நடித்து அனைவரது மனதையும் கொள்ளை கொண்டார் நடிகை சாய் பல்லவி.

"ஒரு பொண்ணு உண்மையா பேசுனா இப்படி எதிர்ப்பீங்களா"!!எந்த மாதிரியான ஒரு நாட்டுல நாம வாழுறோம்!! சாய் பல்லவிக்கு ஆதரவாக பதிவிட்டுள்ள திவ்யா ஸ்பந்தனா!! 1

அதிக மேக்கப், பயங்கர கிளாமர் இருந்தால் தான் ரசிகர்களை கவர்ந்து முன்னணி நடிகையாக இருக்க முடியும் என்பதை மாற்றி, சாதாரணமாக தாவணி சேலையில் தோன்றிய ஒரே படத்தில் தென்னிந்திய முழுவதும் தனக்கென பெரிய ரசிகர் பட்டாளங்களை உருவாக்கினர். நடனம் நன்றாக ஆட தெரிந்ததால் நடிக்கும் படங்களில் அதுவும் கை கொடுக்க, அடுத்தடுத்து வெற்றி படங்களை கொடுத்துவருகிறார்.

குறிப்பாக தெலுங்கில் அறிமுகமான “ஃபிடா” படம் முதல் கடைசியாக நடித்த “ஷியாம் சிங்கா ராய்” வரை பெரிய்ட்ஜ்க தோல்விகளை சந்திக்கும் நல்ல வெற்றி படங்களை கொடுத்துள்ளார். தமிழிலும் சில வெற்றி படங்கள் நடித்துள்ளார். அடுத்து இவர் ஏற்கனவே ராஜ் கமல் நிறுவனம் சார்பில் சிவகார்த்திகேயனுடன் அடுத்த படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

தெலுங்கில் சாய் பல்லவியின் அடுத்தப் படமான ‘விராத்த பருவம்’ ஜூன் 17-ஆம் தேதி திரைக்கு வருகிறது. இந்த படத்தில் ராணா, ப்ரியாமணி பலர் நடித்துள்ளனர். படத்தில் நக்ஸ்லைடாக ராணா நடித்துள்ளார். உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு இந்த படம் உருவாகியுள்ளது. படம் விரைவில் வெளியாக உள்ளதால், ப்ரோமோஷன் வேலைகளில் சாய் பல்லவி இறங்கியுள்ளார்.

அப்படி ஒரு தனியார் பேட்டியில் கலந்து கொண்ட கொண்டு பேசிய போது, “நான் நடுநிலையான சூழலில் வளர்ந்தேன். இடதுசாரி, வலதுசாரி என இரண்டையும் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் எது சரி, எது தவறு என்று கூற முடியாது. ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ படத்தில் காஷ்மீர் பண்டிட்கள் எவ்வாறு கொல்லப்பட்டார்கள் என்பதை காண்பித்தார்கள். அதே போல கொரோனா லாக்டவுன் காலத்தில் ஒரு சம்பவம் நடந்தது. மாட்டிறைச்சி எடுத்துச் சென்ற நபரை கும்பல் ஒன்று முஸ்லிம் என்று சந்தேகித்து அவரை அடித்துக் கொன்றது. மேலும், அவரை நோக்கி ‘ஜெய் ஸ்ரீராம்’ என்று கூறுமாறு கோஷமிடச் செய்தனர். இதற்கும் காஷ்மீரில் நடந்ததற்கும் என்ன வித்தியாசம் உள்ளது? இரண்டும் வன்முறைதான்.” என்று தெரிவித்திருந்தார்.

இந்த கருத்துக்கு ஆதரவும் எதிர்ப்பும் கிளம்பியுள்ள நிலையில், தற்போது சாய் பல்லவி மீது ஹைதராபாத் போலீஸில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. இயக்கத்தின் இளைஞர் பிரிவான பஜ்ரங் தள் அமைப்பைச் சேர்ந்த அகில் என்ற நபர் சாய் பல்லவி மீது ஹைதராபாத் சுல்தான் பஜார் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். பசு பாதுகாவலர்களையும், காஷ்மீரி தீவிரவாதிகளையும் சாய் பல்லவி ஒப்பிட்டு பேசியுள்ளார். அவர் மீது நடவடிக்கை வேண்டும் என அந்தப் புகாரில் கூறப்பட்டுள்ளது. சாய் பல்லவி மீது மட்டுமல்ல, ‘விராத்த பருவம்’ இயக்குநர் வேணு உடுகுலா மீதும் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

பல்வேறு வலதுசாரி அமைப்புகளின் சார்பாகவும் நடிகை சாய் பல்லவிக்கு வெவ்வேறான எதிர்ப்புகள் கிளம்பி வருகிறது. சிலர் சாய் பல்லவிக்கு ஆதரவு தெரிவித்தாலும், நடுநிலைவாதிகள் இதனை ஆதரித்த வந்தாலும், சில அமைப்பினர் அது எப்படி ஒரு நடிகை இவ்வாறாக பேசலாம் இது மிகவும் கண்டனத்திற்கு கூறிய விஷயமாகும், அவர் மேல் புகார் அளிக்கப்போகிறோம் என கூறுவது மட்டுமின்றி, பல்வேறு வழக்குகளும் இவர் மேல் பதியப்படுத்து வருகிறது.

இது இப்பொது சாய் பல்லவிக்கு பெரிய தலைவலியாக அமைய, அவருக்கு ஆதரவாக முதல் குரல் எழுப்பியுள்ளார் கன்னட நடிகை திவ்யா ஸ்பந்தனா. இவர் தமிழில் தனுஷுடன் பொல்லாதவன் படத்திலும், சிம்புவுடன் குத்து படத்திலும் நாயகியாக நடித்து இருந்தவர். கன்னடத்தில் முன்னணி நடிகையாக இருந்த இவர், 2013ஆம் ஆண்டு காங்கிரஸ் சார்பில் கர்நாடாகாவில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக இருந்தார்.

இப்பொது சாய் பல்லவிக்கு எதிராக வெடித்திருக்கும் இந்த பிரச்சனையை குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள இவர், “ஒடுக்கப்படுவபவர்கள் பாதுகாக்கபட வேண்டும், பெண் என்பதாலும் உண்மையை உரக்க குறித்தாலும் இவருக்கு இவ்வளவு கண்டங்கள் தெரிவிக்க கூடாது. இவை அனைத்தும் நிறுத்தப்படவேண்டும், உண்மையை இப்பொதெல்லாம் உண்மையை பேசுபவர்கள் தேசப்பற்று இல்லாதவர்கள் என்றும், மேம்போக்காக நல்ல படியாக நடந்து கொள்கிறோம் என பேசினாலும் உண்மையில் அவ்வாறாக இல்லை, நாம் எந்த மாதிரியான உலகில் வாழ்கிறோம்” என தன்னுடைய கண்டனத்தையும், பல்லவிக்கு தன்னுடைய ஆதரவையும் தெரிவித்துள்ளார்.

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்