கொசு மருந்தை குடித்து தற்கொலை முயற்சி, மருத்துவமனையில் இருந்து எஸ்கேப் ஆன திவ்யபாரதி..!

வெளியிட்டது

சமீபகாலமாக சர்ச்சைகளில் சிக்கி வரும் ஒரு பெயர்தான் திவ்யபாரதி. சினிமாவில் துணை நடிகையாக இருந்து வருகிறார். தமிழில் சூரரை போற்று, ஈஸ்வரன், எம்ஜிஆர் மகன் உள்ளிட்ட படங்களில் சிறு வேடங்களில் நடித்தும் இருக்கிறார். மேலும் தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் இருந்து வருகிறார். இவர் மீது பிரபல யூடியூப் நடத்தி வரும் பகலவன் ராஜா என்பவர் சமீபத்தில் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்திருந்தார். திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலை சேர்ந்தவர் பகலவன் ராஜா. இவர் youtube சேனல் ஒன்றை நடத்தி வருகிறார். இவர் யூடியூப்பில் கவிதைகள் தொடர்பான வீடியோக்களை வெளியிட்டு அதன் மூலமாக பணம் சம்பாதித்து வந்தார். தனது youtube சேனலில் நடிப்பதற்காக நடிகை ஒருவரை தேடி வந்த பொழுது திண்டுக்கல் தாடிக்கொம்பு சேர்ந்த திவ்யபாரதி என்ற துணை நடிகை அறிமுகமாக இருக்கிறார். பின்னர் பகலவன் ராஜா வீட்டிற்கு அடிக்கடி திவ்யபாரதி வந்து போக, அவர்கள் இருவருக்கும் காதல் மலர்ந்துள்ளது. பகலவன் ராஜாவை திருமணம் செய்து கொள்ள விரும்புவதாக திவ்ய பாரதி கூறி வந்த நிலையில் மீது நேற்று காவல் நிலையத்தில் பகலவன் ராஜா பண மோசடி புகார் ஒன்றை அளித்தார்.

கொசு மருந்தை குடித்து தற்கொலை முயற்சி, மருத்துவமனையில் இருந்து எஸ்கேப் ஆன திவ்யபாரதி..! 1

அதில் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி திவ்யபாரதி தன்னிடம் இருந்து 30 லட்சம் ரூபாய் பணம், 10 சவர நகைகள் உட்பட அனைத்தையும் பெற்றுக் கொண்டதாகவும், மேலும் ஒரு வீடு எடுத்து அதற்கு பர்னிச்சர் வாங்குவதற்கு, 7 லட்சம் ரூபாய் வரை செலவு செய்துள்ளதாகவும், ஆனால் அவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் இருப்பதை அறிந்து பகலவன் நேற்று திண்டுக்கல் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். இது குறித்து வழக்கு பதிவு செய்து காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர். ஆனால் பகலவன் ராஜா தன்மீது பொய்யான குற்றச்சாட்டை கூறியிருப்பதாகவும், தன்னிடமிருந்துதான் 10 லட்சம் ரூபாயை பகலவன் பெற்றுக் கொண்டிருப்பதாக திவ்யபாரதி திண்டுக்கல் மாவட்ட கண்காணப்பாளரிடம் புதிய புகார் ஒன்றை அளித்திருந்தார். ஆனால் அவர் பேசிய ஆடியோ மற்றும் ஸ்க்ரீன் ஷாட்கள் மூலமாக திவ்ய பாரதி தான் பண மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. எனவே போலீசார் தன்னை கைது செய்து விடுவார்களோ என்று பயந்து திவ்யபாரதி கொசு மருந்தை கொடுத்து தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது.

நேற்று இரவு அவரது வீட்டில் கொசுக்களை விரட்ட பயன்படுத்தப்படும் ஆல் அவுட் மருந்தை சாப்பிட்டு தற்கொலை முயற்சிக்கு மேற்கொண்டதால், அவரை திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் நள்ளிரவு திடீரென திவ்யபாரதி மாயமாகி இருக்கிறா.ர் இரவோடு இரவாக திண்டுக்கல் மருத்துவமனையில் இருந்து எஸ்கேப் திவ்யபாரதியை காவல்துறையினர் தேடி வந்த நிலையில், அவர் அதே பகுதியில் ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், தற்போது அவர் நலமுடன் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. 30 லட்சம் பணத்தையும் 10 சவரன் நகையையும் ஏமாற்றிய அவரை போலீசார் கைது செய்யக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சிகிச்சை முடிந்த பின்பு அவரை கைது செய்து சிறையில் அடைப்ப இருப்பதாக காவல்துறை தரப்பினர் தகவல் தெரிவித்துள்ளனர்.

Video Code Embed Credits: Thanthi TV

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்