Categories: அரசியல்

மறைமுக தேர்தலை ஒத்திவைப்பு: திமுக வழக்கு

ஊராட்சி ஒன்றியத் தலைவர் துணைத் தலைவர் பதவிகளுக்கான தேர்தல் நிறுத்தப்பட்டதை எதிர்த்து திமுக உயர் நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளது.

மூன்றாண்டுகளுக்குப் பிறகு கடந்த டிசம்பர் மாதம் இரு கட்டங்களாக தமிழக 27 மாவட்டங்களில் உள்ள கிராமப்புற பதவிகளுக்கு மட்டும் உள்ளாட்சி தேர்தலை நடத்தப்பட்டது.

இதனைத் தொடர்ந்து மாவட்ட ஊராட்சித் தலைவர், துணைத்தலைவர்; ஊராட்சி ஒன்றிய தலைவர், துணைத்தலைவர்; ஊராட்சிமன்றத் துணைத் தலைவர் ஆகிய பதவிகளை முதல் தேர்வு நடைபெற்றது.

மறைமுக தேர்தலை ஒத்திவைப்பு: திமுக வழக்கு 1
சென்னை உயர் நீதிமன்றம்

இந்நிலையில் திமுக வெற்றி பெறும் நிலையில் இருந்த கடலூர், தர்மபுரி, திருவண்ணாமலை மாவட்டங்களில் உள்ள ஊராட்சி ஒன்றியத் தலைவர் மற்றும் துணைத் தலைவர் தேர்தல் நிறுத்தப்பட்டது.

இதனை தொடர்ந்து திமுக தரப்பில் மூத்த வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி சத்தியநாராயணன் முன்னிலையில் ஒரு செய்தார்.

அதனை ஏற்ற நீதிபதி, சேலம் மற்றும் கரூர் மாவட்டங்களில் வாக்கு எண்ணிக்கையின் போது பதிவு செய்யப்பட்ட கண்காணிப்பு கேமரா பதிவுகளை தாக்கல் செய்ய கோரிய திமுகவின் ஆர்.எஸ்.பாரதி தொடர்ந்துள்ள வழக்கில் கூடுதல் மனுத்தாக்கல் செய்ய அறிவுறுத்தி உள்ளார்.

விடுதலை தமிழ்முரசு

Senior Editor - TamilGlitz சமூக அரசியல் பொருளாதாரம் குறித்தான ஆர்வம் அதிகம். மின்னம்பலத்தில் தொடங்கிய பயணம் ஐபேக் வழியாக இங்கு! As a Tamil news enthusiast with a knack for uncovering the hidden political drama behind the glitzy entertainment scene, I'm your source for the juiciest stories and insightful analysis. #விடுதலை

புதிய செய்திகள்