“கொல குத்தாக வெளியாகியிருக்கும் தாய்கிழவி”!! “8 ஆண்டுகள் பிறகு DnA காம்போ “!! திருச்சிற்றம்பலம் படத்தின் முதல் பாடல் வெளியீடு!!

வெளியிட்டது

"கொல குத்தாக வெளியாகியிருக்கும் தாய்கிழவி"!! "8 ஆண்டுகள் பிறகு DnA காம்போ "!! திருச்சிற்றம்பலம் படத்தின் முதல் பாடல் வெளியீடு!! 1

தனுஷின் 3 படத்தின் மூலம் திரையுலகில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் அனிருத். முதல் படத்திலேயே இடம் பெற்ற ‘Why this kolaveri di” உலகளவில் மிக பெரிய வைரலானது. அது மட்டுமின்றி படத்திலுள்ள அனைத்து பாடல்களுமே மிக பெரிய வெற்றியை பெற்றன. முதல் படத்திலேயே தன்னுடைய முத்திரையை பதித்தார் அனிருத். தனுஷின் மனைவி சொந்தக்காரர் தான் அனிருத். இதனாலேயே இந்த படத்தில் வாய்ப்பு கிடைத்தது என்றாலும், அனிருத் தன்னுடைய திறமையை அழுத்தம் திருத்தமாக பதிவிட்டார் இந்த படத்தில். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து தனுஷ் தயாரித்த, சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான “எதிர்நீச்சல்” படமும் அனிருத்தே இசை. இந்த படத்தின் பாடல்கள் மிக பெரிய வெற்றியை கொடுத்தது. இந்த படத்தின் மூலமே சிவகார்த்திகேயன்- அனிருத் கூட்டணி உருவானது. பின்னர் நடிகர் தனுஷ் நடித்த “வேலையில்லா பட்டதாரி” படம். படத்தின் பாடல்களும் படத்திற்கு மிக முக்கிய உறுதுணையாக நிற்க, பத்ம மாபெரும் வெற்றியை பதிவு செய்தது. படத்தின் தீம் மியூசிக் தனுஷின் தயாரிப்பு நிறுவனமான “Wunderbar Films” அதிகாரபூர்வ இசையாக மாறியது. தொடர்ந்து இருவரும் “மாரி” படத்தில் இணைந்தனர். அதற்குள் அனிருத் விஜய்யின் “கத்தி”, அஜித்தின் “வேதாளம்” போன்ற படங்களில் பணியாற்றி மக்களிடம் மிக பெரிய வரவேற்பையும் பெற்று இருந்தார்.

கமர்சியல் படமான “மாரி” படத்தின் வெற்றிக்கு மிக பெரிய ஊந்துக்கோளாக இருந்தார் அனிருத். இசையமைக்கும் அனைத்து படங்களிலும் பாடல்கள், பின்னணி இசை என அனைத்திலுமே மிரட்டத்துவங்கினார் அனிருத். 4வது படமாக தனுஷும் அனிருத்தும் “தங்கமகன்” படத்தில் இணைந்தனர். இருவருமே நல்ல ஒரு கூட்டணியாக மக்களிடம் பெயர் வாங்கி இந்த படமும் இருவருக்கு வெற்றியாக அமைந்தது. DnA காம்போ என மக்கள் இவர்களை அழைக்க துவங்கினார்கள்.

ஆனால் இந்த படம் அடுத்து இருவரும் இணைந்து பணிபுரியும் வாய்ப்பு இருவருக்குமே அமையவில்லை. 8 ஆண்டுகள் இடைவெளியில் தனுஷ் ஹிந்தி மற்றும் ஹாலிவுட் படங்களில் பணியாற்றி இநித்யா சினிமாவின் உச்சத்திற்கு சென்றுள்ளார். அனிருத் தொடர்ந்து விஜயின் “மாஸ்டர்”, ரஜினியின் “பேட்ட”, அண்மையில் வந்த கமலின் “விக்ரம்” என இப்போதைய தமிழ் சினிமாவின் மிக முக்கிய இசைமைப்பாளராக உருமாறியுள்ளார். இந்தியளவில் உற்றுநோக்க படும் இசையமைப்பாளராக உள்ளார்.

இப்பொது சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தனுஷ், ராஷி கண்ணா, பிரியா பவானி ஷங்கர், நித்யா மேனன், பாரதிராஜா, பிரகாஷ்ராஜ் நடிப்பில், மித்ரன் ஜவஹர் இயக்கி வரும் “திருச்சிற்றம்பலம்” படத்தில் இருவரும் இணைந்துள்ளனர். இதுவே ரசிகர்களுக்கு படம் மேல் மிக பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இருவரும் இணைந்து படம் நடித்து 8 ஆண்டுகள் ஆகியுள்ளது.படம் வருகிற ஆகஸ்ட் மாதம் வெளியாகவுள்ள் நிலையில் படத்திலிருந்து முதல் பாடல் இப்பொது வெளியாகியுள்ளது. “தாய் கிளவி” என்ற இந்த பாடல் சமூகவலைத்தளங்களில் கவனம் ஈர்க்க துவங்கியுள்ளது. நீங்களும் அதனை காண….

 

Video Courtesy – SunTV

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்