
இந்தி படத்தின் படப்பிடிப்பு ராமேஸ்வரம் அருகே தனுஷ்கோடியில் நேற்று முன்தினம் ‘லால்சிங் சாட்டா’ என்ற இந்தி படத்தின் சண்டைக்காட்சி படப்பிடிப்பு நேற்று நடைபெற்றது. ஒரு நாள் மட்டுமே நடந்த படப்பிடிப்பை தொடர்ந்து நேற்று நிருபர்களை சந்தித்து பேசினார் இந்தி நடிகர் அமீர்கான்.
அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ‘‘தமிழ் படத்தில் நடிப்பதற்கு விருப்பம் உள்ளது. அதற்கான வாய்ப்பு இதுவரை அமையவில்லை. தமிழ் நடிகர்கள் மிகவும் திறமை வாய்ந்தவர்கள்’’ என்றார். குடியுரிமை திருத்த சட்டம் குறித்து கேட்டபோது, ‘‘அது குறித்து பேச விரும்பவில்லை’’ என்று தெரிவித்தார்.