நடிகை ஸ்ரீதேவி உயிரிழந்தது குறித்து தற்போது பிரபலம் ஒருவர் கூறியிருக்கும் விஷயம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. ஸ்ரீதேவியின் 200 கோடி பணத்திற்கு ஆசைப்பட்டு அவர் கொலை செய்யப்பட்டார் என்பதாக பிரபலம் ஒருவர் பேசியிருக்கும் காணொளி தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. இந்த செய்தி பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. தமிழ் திரையுலகில் ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக இருந்தவர் நடிகை ஸ்ரீதேவி. கமல் ரஜினி என பல முன்னணி நடிகர்களுடன் நடித்து தனக்கென ஒரு இடத்தை பிடித்திருந்தார்.

தமிழ்நாட்டில் உள்ள சிவகாசிக்கு அருகே மீனம்பட்டி என்ற கிராமத்தில் பிறந்தவர் ஸ்ரீதேவி் கந்தன் கருணை படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான அவர் சில படங்களில் தொடர்ந்து குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்தார். பின்னர் பாலச்சந்தர் இயக்கிய மூன்று முடிச்சு படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். அதன் பின்னர் இவர் தமிழில் பல படங்களில் நடித்திருக்கிறார். 16 வயதினிலே, சிகப்பு ரோஜாக்கள், பிரியா, தர்ம யுத்தம், ஜானி, மீண்டும் கோகிலா, மூன்றாம் பிறை உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார்.
1992 ஆம் ஆண்டிற்கு பிறகு அவர் திரைத்துறையிலிருந்து முற்றிலும் விலகி இருந்தார். திருமணம் செய்து கொண்டு போனி கபூருடன் செட்டிலான பின்னர் சில ஹிந்தி படங்களிலும் நடித்திருக்கிறார். தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் என்று பல மொழிகளிலும் தனது வெற்றிக் கொடியை நாட்டி இருந்தார். பாலிவுட்டுக்குச் சென்ற பின்னர் தயாரிப்பாளர் போனி கபூருடன் காதல் ஏற்பட்டு அவருடன் திருமணம் செய்த பின்னர் இருவரும் மும்பையிலேயே செட்டில் ஆகிவிட்டனர். இவர்களுக்கு ஜான்வி கபூர், குஷி கபூர் என்று இரண்டு மகள்கள் இருக்கிறார்கள்.
கடந்த 2018 ஆம் ஆண்டு துபாயில் ஒரு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக சென்றிருந்த ஸ்ரீதேவி அங்கு ஹோட்டலில் உயிரிழந்து கிடந்ததாக தகவல்கள் வெளியானது. குளிக்க சென்ற அவர் பாத் டப்பில் உயிரிழந்து கிடந்த செய்தி ஒட்டுமொத்த இந்தியாவிற்கும் அதிர்ச்சி செய்தியாக இருந்தது. அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பலரும் கூறத் தொடங்கினர். பின்னர் ஸ்ரீதேவியின் உடல் இந்தியா கொண்டுவரப்பட்டு தேசியக்கொடி போர்த்தி அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. இந்த நிலையில் தமிழகத்தில் இருக்கும் பிரபல டாக்டர் காந்தராஜ் என்பவர் அரசியல் விமர்சகராகவும் இருந்து வருகிறார். அவர் தற்போது அளித்திருக்கும் பேட்டி ஒன்றில் ஸ்ரீதேவி கொலை செய்யப்பட்டுள்ளதாக கூறியிருக்கிறார்.
ஸ்ரீதேவி பாத் டப்பில் விழுந்து இறந்தது என்று கூறும் செய்தி அப்பட்டமான பொய் என்றும்,ஸ்ரீதேவியை பணத்திற்காகத்தான் போனி கபூர் திருமணம் செய்து கொண்டார் என்றும், அவர் பேசியிருக்கிறார். நடிகை ஸ்ரீதேவியின் பெயரில் 200 கோடி ரூபாய் மதிப்பிலான இன்சூரன்ஸ் பணம் இருந்தது என்றும், அதை பெறுவதற்காகத்தான் அவர் கொல்லப்பட்டார் என்றும் டாக்டர் காந்தராஜ் அதிர்ச்சி தகவலை கூறியிருக்கிறார். மேலும் போனி கபூர் நரேந்திர மோடிக்கு நெருக்கமாக இருந்தார், அதனால் இந்த விஷயத்தில் இருந்து அவர் தப்பித்து விட்டார் என்றும் காந்தராஜ் பேசியிருக்கிறார். அவரின் இந்த பேட்டி வெளியான பின்பு தற்போது மீண்டும் பரபரப்பு எழுந்திருக்கிறது.
நடிகை ஸ்ரீதேவி சிறு குழந்தையாக தன்னுடைய உறவினர் வீட்டிற்கு அருகில் குடியிருந்ததாகவும், சிறு வயதில் இருந்தே அவரை நான் பார்த்திருப்பதாகவும் ஒரு முறை ஸ்ரீதேவியின் பிறந்த நாளுக்கு என்னை வீட்டிற்கு வந்து அழைத்திருந்தார். அப்போது ஸ்ரீதேவியின் வீட்டிற்கு சென்ற போது பிறந்தநாள் விழாவில் ரஜினி, கமல் என பல திரைப்பிரபலங்கள் இருந்தனர். ஆனால் வெளியில் இருந்து அவருக்கு தெரிந்த ஒரே ஒரு குடும்ப நண்பர் நானாகத்தான் இருக்கும், குழந்தையாக நான் பார்த்து வளர்ந்த ஸ்ரீதேவி இறந்த செய்தியை தொலைக்காட்சியில் பார்த்தபோது என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை என்றும் டாக்டர் காந்தராஜ் தனது பேட்டியில் பேசியிருக்கிறார்.
90களின் இறுதியில் ஸ்ரீதேவி பலருக்கும் பிடித்த முண்ணனி நடிகையாக இருந்தவர். இந்த நிலையில் அவர் இருந்து ஐந்து வருடம் கழித்து காந்தராஜ் இப்படி பேசி இருப்பது தற்போது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இது எந்த மாதிரியான பின் விளைவுகளை ஏற்படுத்த போகிறது என்பது தெரியவில்லை.!