நாடு முழுவதும் வெகு விமர்சையாக கொண்டாடும் நிகழ்ச்சிகளில் ஒன்று கிருஷ்ணர் ஜெயந்தி. பலரும் தங்களது இல்லங்களில் அன்றைய தினம் குழந்தைகளுக்கு கிருஷ்ணர் வேடமிட்டு கொண்டாடுவது வழக்கம். அதன்படி தற்போது பல திரையுலகினரும் தங்களது இல்லங்களில் கிருஷ்ணர் ஜெயந்தியை கொண்டாடி உள்ளனர். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் வீட்டில் ஆண்டுதோறும் கிருஷ்ணர் ஜெயந்தியை கோலாகலமாக கொண்டாடுவது வழக்கம். இந்நிலையில் இந்த ஆண்டு சூப்பர் ஸ்டார் வீட்டு கிருஷ்ணர் ஜெயந்தி கொண்டாட்டத்திற்கு தமிழ் சினிமா நடிகைகள் ஒன்றிணைந்து உள்ளனர். நடிகை மீனா , சுஹாசினி மற்றும் இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஆகியோர் கலந்துகொண்டு உள்ளனர். நடிகை சுஹாசினி தனது தாயுடன் இந்த பூஜையில் கலந்துகொண்டு உள்ளார்.

இந்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த நடிகை சுஹாசினி நிகழ்ச்சிக்கு அழைத்ததற்கு லதா ரஜினிகாந்திற்கு நன்றி என தெரிவித்து உள்ளார். மேலும் மகள்கள் ஐஸ்வர்யா மற்றும் சௌந்தர்யாவுக்கும் நன்றி தெரிவித்து இருக்கிறார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
