தளபதியின் பிறந்தநாளுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் லோகேஷ் கனகராஜ்.! லியோ படம் பற்றி முக்கிய அறிவிப்பு வெளியானது.!

லியோ படம் குறித்த முக்கிய அறிவிப்பை தற்போது அந்த படத்தின் இயக்குனராக இருக்கும் லோகேஷ் கனகராஜ் அறிவித்திருக்கிறார். அதன்படி படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் “நான் ரெடி” விஜயின் பிறந்த நாளை முன்னிட்டு வருகிற ஜூன் 22ஆம் தேதி வெளியாகும் என்பதை அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார் லோகேஷ் கனகராஜ். மாஸ்டர் படத்திற்கு பின்னர் தளபதி விஜய் லோகேஷ் கனகராஜ் உடன் இரண்டாவது முறையாக இணைந்து நடித்து வரும் படம் தான் லியோ. சில மாதங்களுக்கு முன்பு தொடங்கிய இந்த படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் முடிந்து படம் வெளியீட்டுக்கு தயாராகி வருகிறது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை திரிஷா நடித்து வருகிறார். மேலும் இவர்களுடன் கௌதம் வாசுதேவ் மேனன், பிரியா ஆனந்த், அர்ஜூன், மிஷ்கின், மன்சூர் அலிகான், சஞ்சய் தத் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர். மேலும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருவதால் படத்திற்கான எதிர்பார்க்கும் அதிகமாக இருக்கிறது.

தளபதியின் பிறந்தநாளுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் லோகேஷ் கனகராஜ்.! லியோ படம் பற்றி முக்கிய அறிவிப்பு வெளியானது.! 1

விளம்பரம்

இந்தப் படத்தின் பெரும்பாலான படப்பிடிப்புகள் காஷ்மீரில் நடந்தது. இதற்காக படக் குழுவினர் அடிக்கடி காஷ்மீருக்கும் சென்னைக்கும் வந்து சென்று கொண்டிருந்தனர். தற்போது ஒரு பாடல் காட்சி ஒன்றை படமாக்குவதற்காக பிரம்மாண்ட செட்டு ஒன்று அமைக்கப்பட்டு இருக்கிறது. மேலும் படத்தின் இறுதி படப்பிடிப்பு விசாகப்பட்டினத்தில் நடைபெற இருக்கிறது. படம் வருகிற அக்டோபர் 19ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் தற்போது படத்தில் இருந்து ஒவ்வொரு அப்டேட்டுகளாக வெளிவரத் தொடங்கி இருக்கிறது. இன்று காலை இந்த படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் “ரெடியா?” என்று ஒரு ட்வீட் ஒன்றை போட்டு எதிர்பார்ப்பை எகிறச் செய்திருந்தார் தொடர்ந்து தற்போது அவர் புதிய டிவீட் ஒன்றை பகிர்ந்திருக்கிறார்.

தொடர்புடையவை  நயனுக்கு வசனம் சொல்லி குடுக்கும் விக்கி.! 7 ஆண்டுகளுக்கு முன்பு ஷூட்டிங்கில் எடுத்த வீடியோவை பகிர்ந்த விக்னேஷ் சிவன்

தளபதியின் பிறந்தநாளுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் லோகேஷ் கனகராஜ்.! லியோ படம் பற்றி முக்கிய அறிவிப்பு வெளியானது.! 3

விளம்பரம்

அதில் விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு வருகிற ஜூன் 22ம் தேதி “நா ரெடி” என்கிற ஃபர்ஸட் சிங்கிள் பாடல் வெளியாக இருப்பதாக புதிய போஸ்டர் ஒன்றுடன் அறிவித்துள்ளார். அந்த போஸ்டரில் தளபதி வாயில் சிகரெட்டுடன், கையில் துப்பாக்கி ஏந்தியபடி செம்ம மாஸாக போஸ் கொடுக்கிறார். இதனால் தளபதியின் ரசிகர்கள் ஏகத்துக்கும் குஷியில் இருக்கிறார்கள். லோகேஷ் கனகராஜ் மற்றும் தளபதியின் தரமான சம்பத்திற்காக மரண வெய்யிட்டிங் என்று ரசிகர்கள் கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.

விளம்பரம்

Leave a Comment