10 நிமிஷம் கொடுங்க ஓட்டு போட்டுட்டு வந்துடுறேன் பயணிகளிடம் சொல்லிவிட்டு போன பஸ் டிரைவர்

வெளியிட்டது

திமுக அரசு பதவியேற்று 8 மாதங்கள் ஓடிவிட்டன. தேர்தல் வாக்குறுதியில் சொன்னபடி ஆட்சிக்கு வந்த உடனேயே உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து இருந்தார். அதன்படி ஆட்சிக்கு வந்து ஆறு மாதங்களுக்கு உள்ளாகவே கிராம பகுதிகளில் உள்ளாட்சி தேர்தலை நடத்தி முடித்து அனைத்து தொகுதிகளிலும் திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் அமோக வெற்றி பெற்றன. அதை தொடர்ந்து தற்போது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டு இன்று தேர்தல் நடைபெற்று வருகிறது.
காலை முதலே ஆர்வமாக மக்கள் வாக்களித்து வருகின்றனர். முதலமைச்சர் முக ஸ்டாலின் அவரது மனைவி துர்கா ஸ்டாலின், உதயநிதி, கிருத்திகா உதயநிதி, ஈபிஎஸ், ஓபிஎஸ், சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோரும் வாக்களித்து விட்டனர். நடிகர் விஜய், கமல்ஹாசன், டிஆர் போன்றவர்கள் காலை முதல் ஆளாக வந்து வாக்களித்து சென்று விட்டனர்.

10 நிமிஷம் கொடுங்க ஓட்டு போட்டுட்டு வந்துடுறேன் பயணிகளிடம் சொல்லிவிட்டு போன பஸ் டிரைவர் 1

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலை மக்கள் மிகவும் எதிர் பார்த்து காத்து இருந்தனர். கடந்த மாதம் நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தல் அனைத்திலும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளே மகத்தான வெற்றி பெற்றன. கடந்த பத்து ஆண்டுகளாக மாநகராட்சி, நகராட்சி உறுப்பினர் பதவிகள் காலியாகவே உள்ளன. இதனால் பல திட்டங்கள் கிடப்பில் போடப்பட்டன.குறிப்பாக பாதாள சாக்கடை, குண்டும் குழியுமான ரோடுகள், மின் விளக்கு பிரச்னை, தெருக்களில் தெரு நாய் பிரச்னை என்று மக்கள் பல துன்பங்களை அனுபவித்து வந்தனர். அதனால் எப்போது தேர்தல் வரும் என்று மக்கள் காத்து கிடந்தனர். கொரோனா பிரச்சனையால் தள்ளி போய் கொண்டே இருந்த தேர்தல் ஒரு வழியாக தற்போது நடைபெற்று வருகிறது.

இன்று தருமபுரி பகுதியில் காமெடியான நிகழ்வு ஒன்று நடந்துள்ளது. அதில் தருமபுரி பாலக்கோடு வழியாக சேலத்திற்கு தனியார் பேருந்து ஒன்று சென்று கொண்டு இருந்தது. திடீரென பேருந்தை நிறுத்திய ஓட்டுநர் ஸ்ரீதர் திடீரென பேருந்தை நிறுத்திவிட்டு இறங்கி சென்று வாக்கு அளித்து விட்டு வந்தார். இவர் பயணிகளிடம் 10 நிமிடம் கொடுங்கள் ஒட்டு போட்டு விட்டு வருகிறேன் என்று கூறி பேருந்தை ஓரமாக நிறுத்திவிட்டு ஜனநாயக கடமையை ஆற்றிவிட்டு வந்துள்ளார். வைரலாகி வரும் அந்த விடியோவை நீங்களும் காண.. Watch the Below Video….

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்