Categories: சினிமா

விஜய் சேதுபதியையும், DSP படத்தையும் கழுவி கழுவி ஊற்றிய ப்ளூ சட்டை.! கடுமையான விமர்சனம்.!

வெளியிட்டது

நேற்று திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று இருக்கும் திரைப்படமான டிஎஸ்பி படம் குறித்து தற்போது ப்ளூ சட்டை மாறன் தனது விமர்சனங்களை முன் வைத்திருக்கிறார். தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் விஜய் சேதுபதி. இவர் நடிப்பில் நேற்று வெளியாகியிருந்த படம் தான் டிஎஸ்பி. இந்த படத்தை பார்த்துவிட்டு வெளியே வந்த மக்கள் பலரும் படம் நன்றாக இல்லை என்ற கருத்தையே தெரிவித்து இருந்தனர். மேலும் பலர் படத்திலிருந்து பாதியிலேயே எழுந்து வெளியே ஓடத் தொடங்கினர். இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் நடிகை அனு கீர்த்தி, பிரபாகர், குக் வித் கோமாளி புகழ், இளவரசு, சிங்கம் புலி, ஷிவானி நாராயணன் போன்றவர்கள் நடித்திருந்த டிஎஸ்பி திரைப்படத்தை கார்த்திகேயன் சந்தானம் தயாரித்து இருந்தார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

விஜய் சேதுபதியையும், DSP படத்தையும் கழுவி கழுவி ஊற்றிய ப்ளூ சட்டை.! கடுமையான விமர்சனம்.! 1

இந்தப் படத்திற்கு டி இமான் இசையமைத்து இருந்தார். இந்தப் படத்தின் கதை குறித்து பார்த்தால் வில்லனை பழிவாங்கத் துடிக்கும் விஜய் சேதுபதி திடீரென போலீசாக மாறி வந்து வில்லனை பழிவாங்குகிறார். இதுதான் இந்த படத்தினுடைய ஒன் லைன். தற்போது இந்த படம் குறித்து ப்ளூ சட்டை மாறன் வழக்கம் போல் தனது கடுமையான விமர்சனங்களை முன் வைத்திருக்கிறார். அவர் பேசும்போது விஜய் சேதுபதி எப்படி போலீஸ் ஆனார்? ஊரில் ரவுடியாக சுற்றிக் கொண்டிருந்த வில்லன் எப்படி எம்எல்ஏ ஆனார்? என்பதெல்லாம் ஒன்றும் தெரியாமல், ஒரு லாஜிக் கூட இல்லாமல் இந்த படத்தை எடுத்து வைத்திருப்பதாகவும், இந்த படம் உப்புமா மாதிரி ஒன்றுமே இல்லாமல் இருப்பதாகவும் விமர்சித்தார்.

மேலும் டிஎஸ்பியாக வரும் விஜய் சேதுபதியை பார்த்தால் டிஎஸ்பி போலவே இல்லை, அவர் ஓய்வு பெற்ற ஏட்டையா போல் இருக்கிறார் என்று விஜய் சேதுபதி மீது தனிப்பட்ட தாக்குதலிலும் ஈடுபட்டார். படம் மூன்று மணி நேரம் என்றால் ஒன்றரை மணி நேரம் காதலித்துக் கொண்டிருக்கிறார்கள், அதையெல்லாம் வெட்டி தூக்கி எறிந்து இருந்தாலே படம் ஓரளவுக்கு பார்க்கக்கூடிய படமாக இருந்திருக்கும் என்றும் கடுமையாக விமர்சனம் செய்தார். அவரின் வீடியோவை நீங்களும் காண..! Watch the below video..!

 

YouTube Video Code Embed Credits: Tamil Talkies

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்