திடீரென வீங்கிய உடல்.! 38 வயதில் பரிதாபகரமாக உயிரிழந்தார் வெண்ணிலா கபடி குழு நடிகர் ஹரி வைரவன்

வெண்ணிலா கபடி குழு படத்தில் நடித்த ஹரி வைரவன் என்ற நடிகர் தற்போது காலமான செய்தி கிடைத்திருக்கிறது. இன்று காலை உடல் நலக்குறைவால் அவர் மதுரையில் காலமானார். நடிகர் விஷ்ணு விஷால் நடித்த வெண்ணிலா கபடி குழு என்கிற படத்தில் விஷ்ணு விஷாலின் நண்பராக நடித்தவர் ஹரி வைரவன். இவர் அதன் பின்னர் குள்ளநரி கூட்டம், கார்த்திக்கின் நான் மகான் அல்ல போன்ற படங்களில் நடித்து பிரபலமானார். இந்த மூன்று படங்களில் மட்டுமே நடித்த இவர், அதன் பின்னர் படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்காமல் கஷ்டப்பட்டு வந்தார். சமீபத்தில் அவருடைய மனைவியை கொடுத்த பேட்டிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி இருந்தது. சில நாட்களாகவே உடல்நல குறைவால் அவதிப்பட்டு வந்த அவர் இன்று காலை மரணம் அடைந்த செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்.!

திடீரென வீங்கிய உடல்.! 38 வயதில் பரிதாபகரமாக உயிரிழந்தார் வெண்ணிலா கபடி குழு நடிகர் ஹரி வைரவன் 1

விளம்பரம்

 

10 வருடங்களுக்கும் மேலாக சர்க்கரை நோயால் அவதிப்பட்டு வந்துள்ளார் ஹரி வைரவன். இந்த நிலையில் இன்று கை கால்கள் எல்லாம் திடீரென வீங்கத் தொடங்கி இருக்கிறது. இதையடுத்து மருத்துவரை அணுகிய அவர்கள் முதலில் உடலில் எந்த பிரச்சனையும் இல்லை என்று கூறி இருக்கின்றனர். பின்னர் ஒரு நாள் தூங்கிக் கொண்டிருந்தபோதே அவர் கோமாவுக்கு சென்று இருக்கிறார்.

விளம்பரம்
தொடர்புடையவை  "ஜெயலலிதா அம்மாவே இவங்கள தான் செலக்ட் பண்ணாங்க...ஆச்சரியத்தில் உறைந்த ஹன்சிகா"!!

திடீரென வீங்கிய உடல்.! 38 வயதில் பரிதாபகரமாக உயிரிழந்தார் வெண்ணிலா கபடி குழு நடிகர் ஹரி வைரவன் 3

இவருக்கு நடிகர்கள் பிளாக் பாண்டி, சூரி, கார்த்திக் போன்றவர்கள் உதவி செய்திருக்கின்றனர். பின்னர் அவருக்கு இரு கிட்னியும் செயலிழந்து விட்டதாகவும் ஆறு மாத காலம் மட்டுமே உயிரோடு இருப்பார்கள் என்றும் மருத்துவர்கள் கை விரித்து விட்டனர். தொடர்ந்து அவர் உயிரோடு இருக்கும் வரை அவரின் மருத்துவ செலவுக்கு உதவும் படி சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தார் அவரது மனைவி கவிதா.

விளம்பரம்

திடீரென வீங்கிய உடல்.! 38 வயதில் பரிதாபகரமாக உயிரிழந்தார் வெண்ணிலா கபடி குழு நடிகர் ஹரி வைரவன் 5

தன்னுடைய தாலி முதற்கொண்டு அனைத்தையும் விற்றுவிட்டு தனது கணவருக்கு சிகிச்சை பார்த்து வருவதாக அவர் கண்ணீர் மல்க தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் இன்று அதிகாலை 12 மணிக்கு அவருடைய உயிர் பிரிந்துள்ளது. மேலும் அவரின் இறுதி சடங்குகள் இந்த மாலை 4 மணிக்கு நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவருக்கு கவிதா என்கிற மனைவியும் ஒரு மகளும் ஒருவரும் இருக்கிறனர் என்பது குறிப்பிடத்தக்கது. Watch the Below Video..!

விளம்பரம்

YouTube Video Code Embed Credits: Aadhan Cinema

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment