துரைமுருகன் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் … காரணம் என்ன?

துரைமுருகன் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் ... காரணம் என்ன? 1

திமுக பொருளாளரான துரைமுருகன் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.திராவிட முன்னேற்றக் கழகத்தின் தற்போதைய பொருளாளராக விளங்கும் துரைமுருகன். திமுக வின் முண்ணனி பேச்சாளர்களில் ஒருவராக இருக்கிறார். இவர், தன் மாணவப்பருவத்தில் இருந்தே திமுக வுடன் இணைந்து பணியாற்றி வந்துள்ளார்.

சமூக வலைத்தளங்களிலும் மிகவும் பிரபலமாகி வந்த அரசியல் வாதிகளில் துரைமுருகனும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. தன் உடல்மொழி மற்றும் தனித்துவமான பேச்சு பாணியால் பலரையும் ஈர்க்கும் திறன் கொண்டவர். தற்போது 81 வயதாகும் துரை முருகன் சிலகாலமாகவே அடிக்கடி காய்ச்சல் கண்டு வந்துள்ளார்.

விளம்பரம்

சில தினங்களுக்கு முன்பு இதே அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளார். இந்நிலையில் மீண்டும் அதே அப்பல்லோ மருத்துவமனையில் உடல்நலக் குறைவினால் அனுமதிக்கப்பட்டுள்ளார்.வயது மூப்பு காரணமாகவும், உடல் சோர்வின் காரணமாகவும் மருத்துவமனியில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

விளம்பரம்

Leave a Comment