Categories: உலகம்

ஈரானில் ஏற்பட்ட தீடீர் நிலநடுக்கம்!!

வெளியிட்டது
ஈரானில் ஏற்பட்ட தீடீர் நிலநடுக்கம்!! 1

ஈரான் நாட்டின் வடமேற்குப் பகுதியில், ஆப்கன் எல்லையை ஒட்டியுள்ள பகுதிகளில் சன்கன் நகர்ப்புறத்தில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.8 என்ற அளவில் பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்துடைய ஆழம் 8 கிலோ மீட்டர் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.

இந்த நிலநடுக்கத்தால் இதுவரை உயிரிழப்புகள் ஏதும் ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது. எனினும் நில நடுக்கத்தினால் பெரும் பகுதி பாதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் கிடைத்துள்ளது. இது குறித்து எங்கள் குழு விசாரித்து வருகிறது” என்று ஈரான் அவசர கால உதவிக் குழு தெரிவித்துள்ளது.

2017 ஆம் ஆண்டில் ஈராக் – ஈரான் எல்லையில் 7.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவானது. அந்த நிலநடுக்கத்தில் 700-க்கும் மேற்பட்டோர் பலியானார்கள்.

Vinoth Kumar

தன்னம்பிக்கை தான் வெற்றிக்கு முக்கியமாகும் 😎😎😎 பேனா 🖊️ மை உலகை மாற்றும் As a digital journalist born and raised in Tamil Nadu, I'm on a mission to leverage the digital age to bring you the most relevant and personalized news coverage, all while staying true to our Tamil roots.

வெளியிட்டது

புதிய செய்திகள்