
கர்நாடக மாநிலத்தில் பெங்களூரு விவசாய அறிவியல் பல்கலைக்கழகத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) 107-வது இந்திய அறிவியல் மாநாடு நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்ளவதற்கு பிரதமர் நரேந்திர மோடி, கர்நாடகத்திற்கு 2 நாட்கள் சுற்றுப்பயணமாக இன்று வருகை தர உள்ளார். இதன் காரணமாக டெல்லியில் இருந்து தனி விமானத்தில் இன்று மதியம் 2 மணியளவில் பெங்களூருவில் உள்ள எச்.ஏ.எல். விமான நிலையத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி வர இருக்கிறார்.
அதன் பிறகு விமான நிலையத்தில் இருந்து தனி ஒரு ராணுவ ஹெலிகாப்டர் மூலம் துமகூருவுக்கு பிரதமர் நரேந்திர மோடி பயணிக்கிறார். துமகூருவில் உள்ள சித்தகங்கா மடத்திற்கு மதியம் 2.15 மணியளவில் அவர் செல்ல இருக்கிறார்.
இந்த இரண்டு நாட்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்குபெறும் பிரதமர் மோடி, , துமகூரு ஜூனியர் கல்லூரி மைதானத்தில் நடைபெறும் விவசாயிகள் மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்கிறார். . துமகூருவில் நடைபெறும் விவசாயிகள் மாநாட்டில் முதல்-மந்திரி எடியூரப்பா, மணிப்பூர், ஜார்கண்ட் மாநில முதல்-மந்திரிகள், உத்தரகாண்ட் மாநில கவர்னர் கலந்துகொள்ள உள்ளனர்.
இந்நிலையில், கர்நாடக மாநில 25 விவசாயிகள், ராஜ்ய ரைதா சங்கத்தை சேர்ந்தவர்கள். இவர்கள் கருப்புக்கொடி காட்டி மோடிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் நோக்கில், துமுகூருவுக்கு ரெயிலில் சென்று கொண்டிருந்தனர். அவர்களை ஷிவமோக்காவில் தடுத்து நிறுத்தி போலீசார் கைது செய்தனர்.