Categories: உலகம்

நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம்! ரிக்டர் அளவு கோளில் 5.3 ஆக பதிவு!!

வெளியிட்டது
நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம்! ரிக்டர் அளவு கோளில் 5.3 ஆக பதிவு!! 1

நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நேற்று இரவு 7.30 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.3 ஆக பதிவாகியுள்ளது. நேபாளத்தின் வடமேற்கு பகுதியில் உள்ள டைலேக் மாவட்டத்தை மையமாக கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வடமேற்கு பகுதியை சுற்றி இருந்த பகுதிகளில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. நிலநடுக்கத்தால் பீதி அடைந்த மக்கள், வீடுகளை விட்டு வெளியேறினர். இந்த நிலையில், கட்டிடங்கள் குலுங்கின வீடுகளில் விரிசல் ஏற்பட்டது. ஒரு சில இடங்களில் சுவர்கள் இடிந்து விழுந்தன. பொருட்கள் மேல விழுந்ததில் சில பேருக்கு காயம் ஏற்பட்டது.

இதனால், அச்சமடைந்த பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சம் புகுந்தனர். இருந்தபோதிலும், சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது எனினும், நிலநடுக்கத்தால் இதுவரை ஏற்பட்ட பாதிப்போ அல்லது உயிரிழப்பு குறித்தோ எந்த தகவலும் வெளியாகவில்லை. நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகளில் தொடர்ந்து நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. முன்னதாக கடந்த 2015ம் ஆண்டு நேபாளத்தில் எற்பட்ட நிலநடுக்கத்தின் தாக்கம் அதிகமாக இருந்தது, இதனால் 9000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 22,000க்கும் மேற்பட்ட மக்கள் காயமடைந்தது குறிப்பிடத்தக்கது.

லட்சக்கணக்கானோர் வீடுகள் மற்றும் உடைமைகளை இழந்து தவித்தனர். இந்த நிலநடுக்கத்தால் நேபாள அரசு பேரிழப்பை சந்தித்தது குறிப்பிடத்தக்கது. இதேபோல, கடந்த வருடம் டிசம்பர் மாதம் நேபாளம் நாட்டில் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 4.7 ஆக பதிவாகியிருந்தது. காத்மாண்டுவில் இருந்து சுமார் 80 கிமீ தொலைவில் உள்ள சிந்துபால்சவூக் மாவட்டத்தில் இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் அதிகமாக ஏற்பட்டதாக கூறப்பட்டது. நிலநடுக்கம் காரணமாக எந்த பாதிப்புகளும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Vinoth Kumar

தன்னம்பிக்கை தான் வெற்றிக்கு முக்கியமாகும் 😎😎😎 பேனா 🖊️ மை உலகை மாற்றும் As a digital journalist born and raised in Tamil Nadu, I'm on a mission to leverage the digital age to bring you the most relevant and personalized news coverage, all while staying true to our Tamil roots.

வெளியிட்டது

புதிய செய்திகள்