
கடந்த நாடாளுமன்ற கூட்டத்தில் வெறும் 4 பேர் மட்டும் பங்கேற்றிருந்த நிலையில் இன்று நாடாளுமன்ற குழு கூட்டம் நடைபெற உள்ளது. இதில் டெல்லியில் அதிகரிக்கும் காற்றுமாசுவை கட்டுப்படுத்துவதற்காக ஆலோசனை நடத்தப்பட உள்ளது என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த 15ம் தேதி நடந்த கூட்டத்தில் மொத்தமுள்ள 28 உறுப்பினர்களில் குழு தலைவரும் பாஜக எம்பியுமான ஜெகதாம்பிகா பால் உள்பட 4 பேர் மட்டுமே பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
விளம்பரம்