கார்ப்ரேட் ஊழல்: விசாரணையில் எடல்வைஸ்

கார்ப்ரேட் ஊழலில் தொடர்புடைய எடல்வைஸ் குழுமத்தின் நிறுவனர் மற்றும் தலைவர் ரஷேஷ் ஷாக்கு அமலாக்கத்துறையினர் நோட்டிஸ் அனுப்பியுள்ளனர்.

கார்ப்ரேட் ஊழல்: விசாரணையில் எடல்வைஸ் 1
ரஷேஷ் ஷா

சமீப காலமாக இந்தியாவில் கார்ப்ரேட் ஊழல் அதிகரித்து வருகிறது. விஜய் மல்லையா, நீரவ் மோடி போன்ற தொழிலதிபர்கள் கோடி கணக்கில் கடன் பெற்று, அதனை சரியாக திரும்ப செலுத்தாமல் வெளிநாடுகளுக்கு தப்பித்து ஓடிவிடுகிறார்கள்.

விளம்பரம்

இந்நிலையில் 2,000 கோடி ரூபாய் மதிப்பிலான அந்நிய செலாவணி ஊழலில் எடல்வைஸ் குழுமத்தின் தலைவர் மற்றும் நிறுவனர் ராசேஷ் ஷாவுக்கு தொடர்பு இருப்பதாக அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியுள்ளது.

அந்த சம்மனில், அந்நிய செலாவணி தொடர்பான டாக்குமெண்ட்கள், கணக்கு வழக்குகள் மற்றும் ஆதாரங்களை, அமலாக்கத் துறை முன்பு ஆஜராகி சமர்பிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

விளம்பரம்

மும்பையை தலைமையிடமாக கொண்டு இயங்கும் எடல்வைஸ் நிறுவனம், வங்கிசாரா நிதி மற்றும் முதலீட்டு துறையின் முன்னணி நிறுவனமாக திகழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

விளம்பரம்

Leave a Comment