விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஈரமான ரோஜாவே 2 சீரியலில் மிகப்பெரிய மாற்றம் ஒன்று நடந்துள்ளது. இந்த சீரியலில் இருந்து முக்கிய பிரபலம் ஒருவர் வெளியேறியிருக்கிறார். அந்த தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ஈரமான ரோஜாவே சீரியலை முதன்முறையாக இயக்குனர் தாய் செல்வம் இயக்கி வந்தார். ஆனால் யாரும் எதிர்பாராத விதமாக தாய் செல்வம் சமீபத்தில் மரணமடைந்திருந்தார். அவரது மரணம் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி இருந்தது. அத்துடன் இந்த சீரியலும் முடிவுக்கு வந்துவிடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்த சீரியலை இயக்குனர் ராஜா சுந்தரம் தொடர்ந்து இயக்கி வந்தார். பிக் பாஸ் தொடங்க இருப்பதால் சீரியல் முடிவுக்கு வர இருப்பதாக தகவல் வெளியாகி வந்தது.

அதேபோல இத்தனை நாட்களாக சண்டை போட்டு வந்த காவியா – பார்த்தி, ஜீவா – பிரியா ஆகிய ஜோடிகள் மீண்டும் இணைந்து இருக்கின்றனர். இதனால் சீரியல் முடிவுக்கு வருகிறதோ என்கிற கேள்வி ரசிகர்களிடையே எழுந்து வந்தது. ஆனால் இந்த சீரியலை இயக்கி வந்த ராஜா சுந்தரம் சீரியலில் இருந்து விலகி இருப்பதாக தனது சமூக வலைதளப் பக்கத்தில் அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறார். அவர் வெளியிட்டிருந்த அறிவிப்பில் இது ஒரு கனவு ப்ராஜெக்ட் தற்போது அது முடிவுக்கு வந்துவிட்டது எனக்கு ஆதரவு கொடுத்த அனைவருக்கும் நன்றி என்று உடன் நடித்த அனைவரையும் டேக் செய்து பதிவிட்டு இருக்கிறார். இதை பார்த்த பலரும் கதை நன்றாக போய்க் கொண்டிருக்கும் சமயத்தில் இயக்குனர் இப்படி விலகுகிறாரே என்று கேள்வி எழுப்பி வந்தனர்.

தற்போது அவருக்கு பதிலாக பகல் நிலவு சீரியலை இயக்கி வந்த இயக்குனர் ரவி பிரியன் இந்த கதையின் மீதி பாகத்தை இயக்குவார் என்று கூறப்படுகிறது. இயக்குனர் ரவி பிரியன் இதே போல் பகல் நிலவு சீரியலில் இருந்து இயக்குனர் விலகிய போது அந்த சீரியலை வெற்றிகரமாக இயக்கியிருந்தார். இந்த நிலையில் தற்போது ராஜா சுந்தரம் ஈரமான ரோஜாவிலிருந்து விலகிய பின்னர் மீதமுள்ள கதையை ரவிப்பிரியன் இயக்க இருப்பது குறிப்பிடத்தக்கது.
View this post on Instagram