முடிவுக்கு வந்தது ‘ஈரமான ரோஜாவே 2’.! கடைசி ப்ரோமோவை வெளியிட்டது விஜய் டிவி.! இதோ வீடியோ

வெளியிட்டது

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘ஈரமான ரோஜாவே சீசன் 2’ தொடர் தற்போது முடிவுக்கு வந்துள்ளது. அந்த இறுதி ப்ரோமோவை தற்போது விஜய் டிவி வெளியிட்டு இருக்கிறது. ‘ஈரமான ரோஜாவே’ சீசன் 1 கொடுத்த மிகப்பெரிய வெற்றியைத் தொடர்ந்து ‘ஈரமான ரோஜாவே சீசன் 2’ எடுக்கப்பட்டு வந்தது. இதில் காவியா – பார்த்தி ஜோடிகளும், பிரியா – ஜீவா ஜோடிகளும் மக்களின் மனம் கவர்ந்த ஜோடிகளாக வலம் வந்து கொண்டிருந்தனர். தற்போது இந்த கதைப்படி பார்த்தியின் கடைசி தம்பியாக இருக்கும் அர்ஜுனனின் மனைவி ஐஸ்வர்யாவிற்கு சங்கர் என்பவருடன் ஏற்பட்ட நெருக்கத்தால் அவர் கர்ப்பமாக இருப்பது தெரிய வந்தது. இதை மறைத்து அர்ஜுனை ஐஸ்வர்யா திருமணம் செய்து கொள்கிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

முடிவுக்கு வந்தது 'ஈரமான ரோஜாவே 2'.! கடைசி ப்ரோமோவை வெளியிட்டது விஜய் டிவி.! இதோ வீடியோ 1

இந்த உண்மை தற்போது வீட்டில் உள்ள அனைவருக்கும் தெரிய வருகிறது. ஜீவாவும் பிரியாவும் இணைந்து சங்கர் தான் ஐஸ்வர்யாவின் வயிற்றில் வளரும் குழந்தைக்கு காரணம் என்கிற உண்மையை கண்டுபிடித்து வீட்டில் உள்ள அனைவரிடமும் போட்டு உடைத்து விடுகின்றனர். இதனால் சங்கருக்கு ஐஸ்வர்யாவை திருமணம் செய்து வைக்கும் ஏற்பாடுகளும் நடந்து வருகிறது. இதற்கிடையில் அர்ஜுன் காதலித்து வந்த காவியாவின் தங்கை சக்தியை அவருக்கு திருமணம் செய்து வைக்கின்றனர். இத்துடன் இந்த சீரியல் முடிவுக்கு வருகிறதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சீரியல் முடிவடைவது எண்ணி ரசிகர்கள் பலரும் சோகத்தில் ஆழ்ந்து இருக்கின்றனர்.

பலரின் மனம் கவர்ந்த சீரியலாக இருக்கும் ஈரமான ரோஜாவே முடிவுக்கு பின்னர் சக்திவேல் என்கிற புது நாடகம் ஒளிபரப்பப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நீங்களும் தற்போது வெளியாகி இருக்கும் அந்த ப்ரோமோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!

 

YouTube Video Embed Code Credits: Vijay Television

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்