என் கண்ணை பார்த்து ஐ லவ் யூ சொல்லு ஜீவா.! ப்ரியாவிடம் முதல் முறையாக காதலை சொன்ன ஜீவா.!

வெளியிட்டது

ஈரமான ரோஜாவே தொடரின் இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. அதில் ஜீவாவிடம் பிரியா தனது காதலை வெளிப்படுத்துகிறார். இத்தனை நாள் மறைத்து மறைத்து காதலை வெளிப்படுத்தி வந்த இவர்கள் இருவரும் தற்போது வெளிப்படையாக காதலை அறிவித்திருக்கின்றனர். ஈரமான ரோஜாவே தொடர் சற்று வித்தியாசமான கதையம்சம் கொண்ட தொடராக இருந்து வருகிறது. தம்பி காதலித்து வரும் பெண்ணை அண்ணன் பார்த்திபனும், அண்ணனுக்கு நிச்சயிக்கப்பட்டிருந்த பெண்ணை தம்பி ஜீவாவும் திருமணம் செய்து கொள்கின்றனர். ஜோடி மாறியதால் பின்னர் என்ன நடக்கிறது என்பது குறித்த சீரியலாக இந்த கதை இருந்தது. ஆனால் பெரிய அளவில் வில்லத்தனங்களோ, வில்லன் இல்லாத ஒரு நாடகமாக இது இருந்ததால் இந்த நாடகம் பலராலும் விரும்பி பார்க்கப்பட்டது. குறிப்பாக காவியா மற்றும் பார்த்திபன் ஜோடிகளுக்காக இந்த நாடகம் பலராலும் ரசித்து பார்க்கப்பட்டது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

என் கண்ணை பார்த்து ஐ லவ் யூ சொல்லு ஜீவா.! ப்ரியாவிடம் முதல் முறையாக காதலை சொன்ன ஜீவா.! 1

ஜோடிகள் மாறியதால் ஆரம்பத்தில் இந்த நாடகம் பலராலும் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. திருமணத்தன்று பெண் காணாமல் போய்விட்டால் அவரின் தங்கையை திருமணம் செய்து வைப்பீர்களா? என்று கடுமையான விமர்சனத்துடன் இந்த நாடகம் ஆரம்பிக்கப்பட்டது. ஆனால் நாட்கள் செல்ல செல்ல பலரும் இந்த நாடகத்தை விரும்பி பார்க்க ஆரம்பித்தனர். குறிப்பாக பார்த்திபன் காவியா ஜோடிகளின் ரொமான்ஸ் காட்சிகளுக்காகவும் இந்த நாடகம் பலராலும் விரும்பி பார்க்கப்பட்டது. தற்போது கதைப்படி பார்த்திபன் காவியா ஆகியோர் இணைந்து இருக்கின்றனர். ஆனால் மற்றொரு ஜோடியாக இருக்கும் பிரியா ஜீவா என்னும் இணையாமலையே இருந்து வருகின்றனர். விரைவில் அவர்களும் இணைய வேண்டும் என்று இந்த நாடகத்தின் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். அந்த வகையில் தற்போது அடுத்தடுத்த ப்ரோமோக்கள் வெளியாகி வருகிறது. அதில் ஜீவா பிரியாவை இம்ப்ரஸ் செய்வதற்காக பல வழிகளில் முயற்சி செய்கிறார்.


கடைசியில் பிரியாவே ஜீவாவை புரிந்து கொண்டு அவருக்கு ஐ லவ் யூ என்று சொல்கிறார். மேலும் ஜீவாவிடம் என் கண்ணை பார்த்து காதலை தெரிவித்துமாறும் கூறுகிறார், அந்த ப்ரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது. நீங்களும் அந்த ப்ரோமோவை காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!

Youtube Video Embed Code Credits: Vijay Television

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்