நண்பர்களுடன் சித்திரை விஷுவை கொண்டாடிய நயன்தாரா விக்னேஷ் சிவன் தம்பதிகள்.! போட்டோஸ் இதோ. !

தமிழின் முன்னணி நடிகையாக இருக்கும் நடிகை நயன்தாரா தற்போது மலையாள புத்தாண்டான சித்திரை விஷுவை கொண்டாடி இருக்கிறார். குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் அவர் இந்த விழாவை கொண்டாடி இருக்கிறார். கேரள புடவையில் நயன்தாராவும், பட்டு வேட்டி சட்டையில் விக்னேஷ் சிவனும் தற்போது புகைப்படங்கள் எடுத்து அதை வெளியிட்டு இருக்கின்றனர். கேரளாவை சேர்ந்தவர் நயன்தாரா. டயானா குரியன் என்கிற இயற்பெயர் கொண்ட இவர், ஆரம்பத்தில் டிவி தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தார்.

நண்பர்களுடன் சித்திரை விஷுவை கொண்டாடிய நயன்தாரா விக்னேஷ் சிவன் தம்பதிகள்.! போட்டோஸ் இதோ. ! 1

விளம்பரம்

பின்னர் இவருக்கு படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. 2002 ஆம் ஆண்டு மலையாளத் திரைப்படத்தில் நடித்ததன் மூலமாக நடிகையாக அறிமுகமானார். பின்னர் 2005 ஆம் ஆண்டு இவருக்கு தமிழில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஐயா என்கிற படத்தில் மூலமாக தமிழ் திரையுலகுக்கு அறிமுகமானார். அன்று தொடங்கி இன்று வரை சுமார் 75 படங்களுக்கு மேல் நடித்திருக்கிறார். தமிழ் திரையுலகின் லேடி சூப்பர் ஸ்டார் என்றும் அழைக்கப்படுகிறார்.திரைத்துறைக்கு வந்து 20 ஆண்டுகளில் சுமார் 75 படங்களில் நடித்த பெருமை நயன்தாராவையே சேரும். தற்போது தனது முதல் ஹிந்தி படமான ஜவான் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ஷாருக்கான் கதாநாயகனாக நடிக்கிறார்.

தொடர்புடையவை  KPY பாலாவிற்கு தனது அம்மா கையால் 10 லட்சம் ரூபாய் வழங்கிய ராகவா லாரன்ஸ்.! என்ன காரணம் தெரியுமா?

நண்பர்களுடன் சித்திரை விஷுவை கொண்டாடிய நயன்தாரா விக்னேஷ் சிவன் தம்பதிகள்.! போட்டோஸ் இதோ. ! 3

விளம்பரம்

இயக்குனர் அட்லி இந்த படத்தை இயக்கி வருகிறார். ஜவான் படத்தின் மூலமாக ஹிந்தி திரைத்துறையில் தனது முதல் காலடியை எடுத்து வைத்துள்ளார் நயன்தாரா. இதற்கிடையில் நயன்தாராவிற்கு இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் காதல் மலர்ந்தது. 2015 ஆம் ஆண்டு நானும் ரவுடிதான் என்ற படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது அதன் இயக்குனரான விக்னேஷ் சிவனை நயன்தாரா காதலித்தார். 7 ஆண்டுகளாக இருவரும் காதலித்து வந்த நிலையில் சமீபத்தில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். சென்னை மகாபலிபுரம் ரிசார்ட்டில் வைத்து இவர்களுக்கு திருமணம் நடந்தது. திருமணம் முடிந்த நான்கே மாதங்களில் இருவரும் இரட்டை குழந்தைகளுக்கு பெற்றோர்கள் ஆனதாக அறிவித்திருந்தனர். சமீபத்தில் தனது இரட்டைக் குழந்தைகளுக்கு உயிர் ருத்ரோனில் என் சிவன், உலக் தெய்விக் என் சிவன் என்று பெயர் வைத்திருந்ததாக அறிவித்திருந்தனர்.

நண்பர்களுடன் சித்திரை விஷுவை கொண்டாடிய நயன்தாரா விக்னேஷ் சிவன் தம்பதிகள்.! போட்டோஸ் இதோ. ! 5

விளம்பரம்

தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் நயன்தாரா தனது கணவர் விக்னேஷ் சிவனின் instagram மற்றும் twitter பயக்கங்களை பயன்படுத்தி வருகிறார். இந்த நிலையில் அவர் மலையாள புத்தாண்டான சித்திரை விஷுவுக்கு தனது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டிருக்கிறார். அந்த புகைப்படங்களை அவர் instagram பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். கேரள புடவையான வெள்ளைப் புடவையில் நயன்தாராவும் வெள்ளை பட்டு வேட்டி சட்டையில் விக்னேஷ் சிவனும் அந்தப் புகைப்படங்களை எடுத்துள்ளனர். தற்போது அந்த புகைப்படங்களுக்கு லைக்குகள் குவிந்து வருகிறது.

விளம்பரம்

Leave a Comment